மத்திய ஆப்பிரிக்க குடியரசு முஸ்லிம், கிறிஸ்தவ மத கலவரத்தை அடக்க ஐ.நா. படை விரைந்தது
ஆப்பிரிக்கா கண்டத்தில் பிரான்ஸ் நாட்டில் கட்டுப்பாட்டில் இருந்து சமீபத்தில் விடுதலை பெற்ற நாடு மத்திய ஆப்பிரிக்க குடியரசு. இங்கு சமீப காலமாக கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மதக் கலவரம் மூண்டுள்ளது.
அதில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இருந்தும் அங்கு மத கலவரம் ஓய்ந்த பாடில்லை. தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர ஐ.நா.சபை அமைதி தூதுவர்களை அனுப்பியுள்ளது.
ஆப்பிரிக்க யூனியனை சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், பிரான்ஸ் படை வீரர்கள் முகாமிட்டு உள்ளனர். இருந்தும் கலவரம் தொடர்கிறது.
எனவே, கலவரத்தை அடக்க ஐ.நா. படையை பொதுச் செயலாளர் யான் கி மூன் அனுப்பியுள்ளார். அதற்காக முதல் கட்டமாக 3 ஆயிரம் ராணுவ வீரர்கள் மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டுக்கு விரைந்துள்ளனர்.
இன்னும் ஒரு வாரத்துக்குள் மேலும் பல ராணுவ வீரர்கள் விமானம் மூலம் அங்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். அங்கு ஏற்கனவே முகாமிட்டிருக்கும் ஆப்பிரிக்க யுனியன் படைகளுக்கு ரூ.230 கோடி நிதி உதவி செய்யவும் பான்கி மூன் பரிந்துரை செய்துள்ளார்.
Post a Comment