அரசாங்கம் தீர்மானித்தால் பேஸ்புக்கை தடை செய்ய முடியும் - தொலைதொடர்பு ஆணைக்குழு
(Gtn) அரசாங்கம் தீர்மானித்தால் முகநூலை தடை செய்ய முடியும் என இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் கொள்கை ரீதியில் முகநூல் சமூக இணைய வலையமைப்பை தடை செய்ய தீர்மானித்தால், அதனை நடைமுறைப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முகநூலினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் விளக்கம் அளிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
முகநூல் பயன்பாடு குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விழிப்புணர்வு நடவடிக்கைகள் வெற்றியளிக்காவிட்டால் வேறு மாற்று வழிகள் கிடையாது முகநூலை தடை செய்ய நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சிறுவர் அபிவிருத்தி அதிகார சபை அல்லது சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சு கொள்கை அடிப்படையில் முகநூல் பயன்பாட்டை தடை செய்ய வேண்டுமென தீர்மானித்தால், அந்தத் தீர்மானத்தை அமுல்படுத்து முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment