Header Ads



மட்டக்களப்பில் கிறிஸ்த்தவ வணக்கஸ்தலம் மீது தாக்குதல் - கைதான இந்துக்களை விடுவிக்குமாறு மறியல்

(Vi) மட்டக்களப்பு சந்திவெளியிலுள்ள கிறிஸ்த்தவ வணக்கஸ்தலம் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகத்தின் பேரில் ஏறாவூர் பொலிசாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுதலை செய்யக்கோரி  மறியல் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

புதன்கிழமை மாலை 7மணிக்கு பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இப் போராட்டமானது இரவு 9மணிவரை நீடித்திருந்தது. வீதியை மறித்து தடைகள் போடப்பட்டதனால் போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டிருந்தது. 
இதன்போது கலகத்தை தடுக்க இராணுவத்தினரும் பொலிசாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று  மேற்படி பிரதேசத்தில் கிறிஸ்த்தவ மதத்தவர்களால் புதிதாக ஓலை மற்றும் தடிகளினால் அமைக்கப்பட்டிருந்த வணக்கஸ்தலத்தை அகற்றும்படி விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு செவிமடுக்காததால் மதக்கலவரம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமுற்ற இந்து சமயத்தவர்கள்  தேவாலயத்தினை அகற்றியதுடன்  இவர்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில் மதப்போதகர் உட்பட 4பேர்  தாக்குதலுக்குட்டு காயமுற்ற நிலையில் செங்கலடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதன் போது சந்தேகத்தின் பேரில் 3 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களை விடுதலை செய்யக்கோரியே இவ்வார்ப்பாட்டம் புதன்கிழமையன்று மாலை இடம்பெற்றது. இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகந்தன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமண்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர்கள் பொதுமக்கள், பொலிசார் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் இன்று வியாழக்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதி மன்றில் ஆஜர்செய்யப்படுவார்கள் என்றும் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரமே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.