கொழும்பு மேயர் முஸம்மில், முஜீபுர் ரஹ்மான் ஒருவரையொருவர் குற்றம் சுமத்துகின்றனர்..!
( ஏ.எல்.ஜுனைதீன் )
முஜீபுர் ரஹ்மானும் பைறூஸ் ஹாஜியார் ஆகிய இருவரும்தான் எனது மனைவிக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் கொடுத்தால் நாங்கள் வேட்பாளர் பட்டியலில் ஒப்பமிடமாட்டோம். தேர்தலில் போட்டியிடாமல் வெளியேறி விடுவோம் என கட்சியை மிரட்டினார்கள். எனது மனைவி பட்டியலில் இடம்பிடித்து விடுவார் என அஞ்சி இவர்கள் இரண்டு பேரும்தான் வேட்பாளர் பட்டியலில் இறுதியாகவும் ஒப்பமிட்டார்கள். இது கட்சி எடுத்த முடிவு அல்ல. இவர்கள் இருவரும் கட்சியை மிரட்டியதால் எடுக்கப்பட்ட முடிவு. என கொழும்பு மேயர் ஏ,ஜே.எம். முஸம்மில் தனியார் வானொலி ஒன்றில் இன்று 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கையில் இப்படிக் கூறினார்.
மேயர் முஸம்மில் தொடர்ந்து பேசுகையில் மேலும் கூறியதாவது,
எனது மனைவி மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட முன் வந்தது தனது கணவர் கொழும்பு மாநகர சபையின் பிதா என்ற காரணத்திற்காக அல்ல. கடந்த பல வருடங்களாக அவர் மகளிர் சங்கங்களை வளர்த்து கட்சியின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வந்திருக்கிறார்.
கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் எனது பாரியார்தான் முன்னின்று நடத்தி வந்திருக்கிறார். இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமைகளுக்கு இத்தேர்தலுக்கு பிறகுதான் இந்நாட்டிலே ஜனாதிபதித் தேர்தலோ பாராளுமன்றத் தேர்தலோ நடைபெறப் போகின்றது. இதற்கு நாம் இத்தேர்தலில் இருந்து தயாராக வேண்டும். இதற்கு நாம் சிறந்த வேட்பாளர்களை இத்தேர்தலில் போட்டியிடவைக்க வேண்டும். என்று கூறியிருந்தேன்.
கொழும்பு மாவட்டத்தில் கொழும்பின் நகர பிதாவான நான் ஐந்து ஆசனங்களுக்கு பொறுப்பானவன். இப்படியான நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி பல ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது. ஆனால் என்னிடத்தில் இந்த தேர்தலைப் பற்றி எதுவும் கலந்தாலோசிக்கப்படவில்லை. ஒரு கூட்டத்திற்கும் என்னை அழைக்கவும் இல்லை. இது ஏன் எனது பாரியார் மாகாண சபைத் தேர்தலில் ஒரு வேட்பாளராகப் போட்டியிட விண்ணப்பித்திருந்ததன் காரணம்.
ஜோஸப் மைக்கல் பெரேரா வேட்புமனு சபைத் தெரிவுக்குழுவில் இருக்கிறார் அவரின் மகன் தேர்தலில் போட்டியிடுகின்றார். நான் அரசாங்கத்தோடு இணைந்து செயல்படுகின்றேன் என்ற குற்றச் சாட்டு என்மீது இருக்கின்றது. அதுமாத்திரமல்லாமல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபே ராஜபக்க்ஷவின் விருப்பத்தின் பிரகாரம்தான் கொழும்பு மாநகர சபையை வழி நடத்துவேன் என்ற பெரும் குற்றச்சாட்டு என்மீது வைக்கப்பட்டிருக்கிறது.
உண்மையில் அரசாங்கத்தோடு நான் உறவு வைத்திருந்தால் எனது பாரியாரை தேர்தலில் நிறுத்துவதற்கு விரும்பியிருப்பேனா?
என்னை ரவிகருணநாயக்கதானாம் கொழும்பு மாநகர சபையின் நகர பிதாவாக ஆக்கினாராம். ஐக்கிய தேசியக் கட்சியின் நகரபிதா அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்கவே வேலை செய்கின்றாராம் இப்படி ரவி கருணநாயக்க லங்காதீப பத்திரிகைக்கு சொல்லியிருக்கின்றார்.
ரவி கருணநாயக்கவின் வேண்டிய ஒருவர் ஹேமசிறி பெர்ணாந்தோ கொழும்பு மாநகர சபைத் தேர்தல் வருவதற்கு முன்பே அரசாங்கத்தோடு போய் இணைந்து கொண்டார். இப்படிப்பட்டவர்களைத்தான் ரவி கருணநாயக்க தேர்ந்தெடுக்கின்றார்.
இதற்குப் பிறகு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் திஸ்ஸ அத்தனாயக்கவையும் சிறையில் இருந்த சரத்பொன்சேகாவை காண்பதற்காக ரவி கருணாநாயக்க அனுப்புகின்றார். சிறையில் வைத்து சரத் பொன்சேகாவிடம் அனோமா பொன்சேகாவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக கொழும்பு நகரபிதாவுக்கு போட்டியிட விருப்பத்தைக் கேட்க வைக்கின்றார். இதற்கு சரத் பொன்சேகா நீங்கள் அனுமாவைப் போடுங்கள் அவரை நாம் மேயராக ஆக்குவோம். நான் சிறையிலிருந்து வெளியில் வந்து உங்கள் கட்சியிலுள்ள பிரச்சினைகள் அத்தனையையும் சரிபடுத்தித் தருகின்றேன் என்று அவர்களிடம் கூறுகின்றார்.
இதற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாங்கள் எங்கள் கட்சியின் செயலாற்றுக் குழுவில் இதனைத் தெரிவித்து கலந்துரையாடிவிட்டு வருகின்றோம் என்று அவருக்கு கூறினார். கட்சியின் தலைவரும் திஸ்ஸ அத்தநாயக்கவும் சரத் பொன்சேகாவின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குப் பிறகு காலம் சென்ற மஹ்றூப் அவர்களைக் கொண்டு வர முயற்சித்தார்.
ரவி கருணநாயக்க மாத்திரமல்ல முஜீபுர் ரஹ்மானும் பைறூஸும் நாங்கள்தான் முஸம்மிலை நகரபிதாவாக ஆக்கினோம் என்று கூறுகின்றார்கள். அத்தேர்தலில் முஜீபுர் ரஹ்மான் தேர்தல் வேலை செய்யாமல் ஒரு வார காலம் இருந்தார். இது குறித்து முஜீபுர் ரஹ்மானையும் இன்னும் சிலரையும் எனது வீட்டுக்கு அழைத்து ஒரு கூட்டத்தை நடத்தினோம். அந்தக் கூட்டத்தில் முஜீபுர் ரஹ்மான் என்னைப்பார்த்து நீங்கள் நகரபிதாவாக தெரிவு செய்யப்பட்டால் கொழும்பு மத்தி அமைப்பாளர் பதவியை எடுத்துக் கொள்வீர்களே அப்படியானால் நாங்கள் என்ன செய்வது? என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் அந்தப் பதவியை நான் கேட்கமாட்டேன் அதனை உங்களுக்கு பெற்றுத் தருவேன் என்று கூறி அந்த நிபந்தனையின் பேரில் தேர்தலில் வேலை செய்வதற்கு இணங்கினார்கள். பைறூஸ் ஹாஜியார் அவர்கள் எனக்கு எந்த ஒரு வேலையும் செய்யவில்லை.
மத்திய கொழும்பில் காரியாலயம் ஒன்று எடுப்பதற்கு என்னுடைய மூன்று இலட்சம் ரூபா பணத்தைக் கொடுத்து முஜீபுர் ரஹ்மானுக்கும் பைறூஸுக்கும் உதவியிருக்கின்றேன்.
ஆனால் இன்றைக்கு எனது மனைவியை மாகாண சபைத் தேர்தலில் நிறுத்துவதற்கு எல்லோரும் தங்கள் சொந்த அரசியலுக்காகப் பயந்தார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சி எனது மனைவிக்கு செய்த துரோகத்தை விடவும் இதனைக் கட்சிக்கு செய்த துரோகமாகவே நான் கருதுகின்றேன்.
எனது மனைவிக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக் கிடைக்கவில்லை. அச்சந்தர்ப்பத்தில் எனக்கு பஸீல் ராஜபக்க்ஷவிடமிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அவர் பேசும்போது உங்கள் மனைவிக்கு தேர்தல் கேட்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தால் ரவி கருணநாயக்க அரசாங்கத்தின் பக்கம் வந்து சேர்ந்திருப்பார் அது எங்களுக்கு இன்னொரு பிரச்சினையாகப் போயிருக்கும் அதைத்தடுத்தற்காக உங்களுக்கு வாழ்த்துக் கூறவே எடுத்தேன் என்றார்.
ரவி கருணநாயக்க தனது சிபார்சில் மூன்று அபேட்சகர்களைப் போட்டுள்ளார் இவர்களில் யாராவது ஒருவர் தேர்தலில் வெற்றி பெற்றால் நான் எனது மேயர் பதவியை விட்டு விலகி வீட்டுக்குச் சென்று விடுவேன். நான் கட்சி மாறவில்லை கட்சிக்காகவே போராடுகின்றேன்.என்று தெரிவித்தார்.
இதேவேளை மேயர் ஏ.ஜே.எம் முஸம்மிலினால் குற்றம் சாட்டப்பட்ட முஜீபுர் ரஹ்மான் தொலைபேசி மூலம் நேரடியாகத் தொடர்பு கொண்டு பதிலளிக்கையில் தெரிவித்ததாவது:-
மேயர் அவர்கள் எங்களை நோக்கியதாக பல குற்றச் சாட்டுக்களைக் கூறியிருக்கிறார். எங்களுக்கு மூன்று இலட்சம் ரூபா பணம் தந்ததாகவும் கூறுகின்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மத்திய காரியாலயத்திற்குத்தான் அவர் அந்தப் பணத்தைக் கொடுத்திருக்கிறார். அந்தப் பணம் எங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு திண்பதற்கு கொடுப்பதற்கோ அல்லது நாங்கள் வீட்டுக்கு கொண்டுபோவதற்கு எடுக்கவில்லை.அந்தப் பணம் கட்சிக் காரியாலயம் எடுப்பதற்காகும்.
அடுத்தது அவரின் மனைவிக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்காத காரணம் வேட்புமனு சபை தெரிவுக் குழு எடுத்த முடிவு. அன்று 30 வருடங்கள் அரசியல் செய்த மஹ்றூப் ஹாஜியாருக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி கொடுக்காமல் கட்சி முடிவு எடுத்தது முஸம்மிலுக்குத்தான் நகரபிதா வேட்பாளர் அனுமதி கொடுத்தது. அந்த நேரத்தில் மஹ்றூப் ஹாஜியாருடன் நாங்கள் இருந்தாலும் கட்சி எடுத்த முடிவுகளை ஏற்றுக் கொண்டு முஸம்மிலை நகரபிதாவாக ஆக்க பாடுபட்டோம். நாங்கள் மஹ்றூப் ஹாஜியாருக்கு அந்த இடத்தை வழங்கவில்லை எனக் கூறிவிட்டு அரசாங்கத்தோடும் கோத்தபாய ராஜபக்க்ஷவுடனும் சேர்ந்து கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடிக்க நாங்கள் வேலை செய்யவில்லை. என்றார்.
Narrated By Abu huraira,
ReplyDeletethe prophet said" your people will keen to have the authority of ruling which will be a thing of regret for you on the day of resurrection what an excellent wet nurse it is yet what a bad wearing on it is!
ஒழுக்கமுள்ள, நன்நடத்தையுள்ள எந்த முஸ்லிம் பெண்களும் அரசியலில் ஈடுபடவே மாட்டார்கள். மாநகர சபை சார்ந்த விடயங்களில் மேயராக இருக்கும் சகோதரர் முஸம்மில் மார்க்க அறிவிலும் மேயராக இருந்திருந்தால் இப்படி நினைத்திருக்கவேமாட்டார். ஒவ்வொரு மனைவிக்காகவும் மறுமையில் கணவன்மார் இறைவனிடம் பதில் சொல்லியே ஆக வேண்டுமே என்பதை இவர்கள் நினைக்கக் கூடாதா? இதுபோன்ற அரசாங்கப் பதவிகளைப் பெற்று கண்டவன், கடியவனோடு சர்வசாதாரணமாக கதைக்கவும், கொஞ்சவும் தன் மனைவிக்கு வாய்ப்பளிக்கக் கோருவது வெட்கம் கெட்ட செயலல்லவா? வெட்கம் ஈமானின் ஒரு பகுதி என முஹம்மத் (ஸல்) கூறியது இவர்களுக்குத் தெரியாதா?
ReplyDelete