காத்தான்குடி நகரசபை உறுப்பினர் அலிசப்றி தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி
காத்தான்குடி நகரசபையின் ஆளும் தரப்பு உறுப்பினர் அலிசப்ரி நபர்ஒருவரினால் 01-02-2014 இரவு சுமார் 10.00 மணியழவில் தாக்கப்பட்டு காத்தான்குடி ஆதாரவைத்தியசாலைில் அனுமதிக்கப்பட்டள்ளார்.
நகர சபை உறுப்பினர் அலிசப்ரி புதிய காத்தான்குடியில் உள்ள தனது வீட்டுக்கு முன்னால் நின்ற சமயம் குறித்த நபர் மோட்டார் சைக்கிலில் வந்து அலிசப்ரியை தலைக்கவசத்தால் (HELMET) தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோட்டார் சைக்கில் மோதலின் காரனமாகவே மேற்படி தாக்குதல் இடம் பெற்றதாகவும் தகவல் தெரிவித்தனர். இத்தாக்குதலினால் அலிசப்ரியின் நெத்தியில் பலமான காயம் ஏற்பட்டு இரத்தக்காயங்களுடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தான் தாக்கப்பட்டு இரத்தக் காயங்களுடன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று ஒரு மணித்தியாலம் சென்றும் கூட எனது முறைப்பாட்டினை அங்கு கடமையில் இருந்த அதிகாரிகள் முறைப்பாட்டினை பதியவில்லை என காத்தான்குடி நகரசபையின் ஆளும் தரப்பு உறுப்பினர் அலிசப்ரி கவலையுடன் தெரிவித்தார்.
தன்னை தாக்கிய நபருக்கு எதிராக பொலிசார் உடன் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என அலிசப்ரி தெரிவித்தார். விடயமறிந்த கிழக்குமாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுாக், நகர முதல்வர் SHM அஸ்பர்,நகர சபை உறுப்பினர் HMM பாக்கீர் ஆகியோர் வைத்தியசாலைக்குச் சென்று பார்வை இட்டனர்.
Post a Comment