அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலைக்கு உதவிகள்
(யு.எல்.எம். றியாஸ்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரிவிற்குட்பட்ட வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சினால் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான 10 படுக்கைகள் அடங்கிய உபகரனத்தொகுதிகள் இன்று (21.02.2014) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் வைத்து வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை, சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலை ஆகியவற்றிற்கு இவ் உபகரனத்தொகுதிகளை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்ராலெப்பை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் வைத்திய அத்தியட்சகர்கள்,வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Post a Comment