Header Ads



ஈ.பி.டி.பி. யிலிருந்து கமலேந்திரன் அவுட்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து வடக்கு மாகாண சபை உறுப்பினரும் எதிர் கட்சித் தலைவருமாகிய கந்தசாமி கமலேந்திரன் நீக்கப்பட்டுள்ளார். 

16.01.2014ம் திகதிய கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில், ஏற்கனவே கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட முடிவிற்கு அமைய அவர் கட்சியில் இருந்து உடன் அமுலிற்கு வரும் வண்ணம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் நிர்வாகச் செயலாளரினால் யாழ்.சிறைச்சாலை அத்தியட்சகர் ஊடாக அவரிற்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சிரே~;ட உறுப்பினரும், முன்னாள் நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவருமான டானியல் றெக்~pயன் என்பவரை கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்;பட்டு, பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் நீங்கள் தற்பொழுது விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையிலும், இவ்வாறு நீங்கள் கைது செய்யப்பட்டவுடன் எமது கட்சியின் அங்கத்துவத்திலிருந்து உடனடியாக அமுலாகும் வகையில் உங்களது கட்சி அங்கத்துவம் ஏற்கனவே செயலாளர் நாயகத்தினால் இடைநிறுத்தப்பட்டிருக்கும் சூழ்நிலையிலும், எமது கட்சியின் மத்திய குழு கடந்த 23.12.2013ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்திய கூட்டத்தில் உங்கள் மீது பொலிஸாரால் சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டும், இக்குறித்த கொலைக் குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட்ட வகையில் ஊடகங்களின் மூலம் வெளியிடப்பட்ட பல்வேறு செய்திகளும், கட்டுரைகளும், நேர்காணல்களும் எமது கட்சியின் மத்திய குழுவின் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்ததுடன், உங்களைக் கட்சியின் அங்கத்துவத்திலிருந்து  ஏற்கனவே இடைநிறுத்திய செயலாளர் நாயகத்தின் தீர்மானமும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

இக்குறிப்பிட்ட கொலைச் சம்பவத்துடன் நீங்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ள நிலைமையையும், இச் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக உங்கள் வசமிருந்த சட்டரீதியற்ற வகையில் நீங்கள் வைத்திருந்த கைத்துப்பாக்கி ஒன்றை உங்களது தகவலின் அடிப்படையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள நிலைமையையும், இக்கொலைச் சம்பவத்திற்கு சில வாரங்களுக்கு முன்னர் வட மாகாண சபையின் தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் உங்கள் உதவியாளர் ஒருவரிடமிருந்து சட்டரீதியற்ற வகையில் அவர் வைத்திருந்த கைத்துப்பாக்கி ஒன்றையும்  யாழ்ப்பாணத்தில் பொலிஸார் கைப்பற்றி இருந்த சம்பவம் தொடர்பாகவும் எமது மத்திய குழுவின் உறுப்பினர்கள் மத்தியில் கருத்துப் பரிமாறப்பட்டது. 

உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் கொலைக் குற்றச்சாட்டின் காரணமாக எமது கட்சிக்கும், அதன் தலைமைக்கும், அதன் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், அபிமானிகள் யாவருக்கும் எற்பட்டுள்ள அசௌகரியங்களையும், அவமானங்களையும்  களையக்கூடிய வகையிலும், பொது மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு அரசியல் ஸ்தாபனம் என்ற முறையில் எமது கட்சியின் நற்பெயரையும், மக்கள் அபிமானத்தையும் தொடர்ந்தும் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியம் கருதியும், உங்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கையாக உங்களை எமது கட்சியின் அங்கத்துவத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டுமென எமது மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதென்பதனையும் உங்களுக்கு இக்கடிதம் மூலம் அறிவிக்கும்படி மத்திய குழு என்னைப் பணித்துள்ளது.

மேலே கூறியவாறு கடந்த மார்கழி மாதம் கட்சியின் மத்திய குழுவினால் ஏற்கனவே மேற்கொண்டிருந்த தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதென 16.01.2014 நடைபெற்ற மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்ததுடன், இத்தீர்மானத்தின் அடிப்படையில் நீங்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அங்கத்துவத்திலிருந்து மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் மத்திய குழுவின் மேற்படி தீர்மானத்தை உங்களுக்கு எழுத்து மூலம் யாழ்ப்பாண சிறைச்சாலை அத்தியட்சகர்; ஊடாக உங்களுக்குக் கிடைக்கத்தக்கதாக பதிவுத் தபால் மூலம்   அறிவிக்குமாறும் நான் பணிக்கப்பட்டுள்ளேன்.

இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் 29.01.2014 திகதியிடப்பட்ட அக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சி. தவராசா                                           
ஊடகப் பேச்சாளர்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

No comments

Powered by Blogger.