அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் புதிய அபிவிருத்தி சங்கம்
(ஏ.எல்.ஜனூவர்)
அரசாங்கத்தின் புதிய சுற்றுநிருபத்துக்கமைவாக கடந்த ஆண்டில் இயங்கி வந்த அனைத்து பாடசாலை அபிவிருத்தி சங்கங்களும் இவ்வாண்டு 01.01.2014 ல் கலைக்கப்பட்டு கணக்குகள் அனைத்தும் மூடப்பட்டு புதிய அபிவிருத்தி சங்கத்தினை மார்ச் 31 ஆம் திகதிக்குள் புணரமைத்து புதிய கணக்குகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
இப் புதிய அபிவிருத்தி சங்கத்தில் பழைய மாணவர் சங்கத்தில் இருந்து 02 உறுப்பினர்களும், ஏனையவை பெற்றோர்களில் இருந்து தெரிவு செய்யப்படுவர். பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் அனைத்து பெற்றோர்களும் அங்கத்தவர்களாக இணைத்துக் கொள்ளப்படுவர். இவர்களிடமிருந்து 600 ரூபாய்க்கு மேற்படாத தொகை வருடமொன்றுக்கு அறவிடப்பட வேண்டும்.
இதற்கமைவாக அனைத்து பாடசாலைகளில் இருந்தும் தற்போது அபிவிருத்தி சங்கங்கள் புணரகைகப்பட்டு வருகின்றது. அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் இன்று அதன் அதிபர் எம்.ஏ.அன்சார் தலைமையில் இது பற்றி பெற்றோர்களுக்கும், பழைய மாணவர்களுக்கும் விளக்கமளிக்கும் கூட்டம் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது பழைய மாணவர் சங்கம் சார்பாக 02 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
இச்சங்கம் அமைக்கப்படுவத் மூலம் பாடசாலையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை மேற்கொள்ளல், ஏனைய தளபாடக் குறைபாடுகள், மாணவர்கள் கல்வி கற்பதற்கு தேவையான தேவைகளை இணம் கண்டு அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதியும், ஏனைய நிதிகளைக் கொண்டும் இச்சங்கம் பூர்த்திசெய்யும்.
Post a Comment