Header Ads



குடிசை வீட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்த றிசாத் பதியுதீன் (படங்கள்)



வடக்கில் வாழும் மக்களது மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேசமும், அதனோடு தொடர்புபட்ட அமைப்புக்களும் இன்று பேசிக் கொண்டிருக்கின்ற போது நகரத்துக்குள் குடிசைகளில் வாழும் மக்கள் குறித்து  இந்த சமூகம் ஏன் மௌனம் சாதிக்கின்றன என்ற கேள்விக்கு பதில் தேட வேண்டியது எமது பொறுப்பாகும்.கடந்த 30 வரு அழிவுகளை சந்தித்த மக்கள் இன்று இதிலிருந்து விடுபட்ட அமைதியான வாழ்க்கையினை வாழ்ந்து வருகின்றனர்.கடந்த 30 வருட காலம் கேட்ட குண்டுச் சத்தங்கள்,மரண அவலங்களும் இன்று அகன்று நிம்மதியான சூழலில் வடக்கு வாழ்கின்றனர் என்பதை சர்வதேச நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.

ஆனால் துரதிஷ்டம் இந்த நாடுகள் ஏன் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் மௌனம் சாதிக்கின்றன என்பது புரியாததொன்றாகவே இருக்கின்றது. 1990 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் வடக்கில் இருந்து துடைத்தெறியப்பட்டனர்..இது இனவாதத்தின் உச்ச கட்டமாகும்.இதனது நோக்கமும்,எதிர்பார்ப்பும் இஸ்லாத்தினதும், முஸ்லிம்களினதும் அடையாளங்கள் துடைக்கப்பட்டுவிடும் வடக்கில் என்பதாகவே இருந்தது..இதனை தலைவர்கள் சிந்தித்த போதும்,படைத்தவன் எல்லாத் தீர்ப்புகளுக்கும் மேல் எழுதக் கூடியவன் அதனை மாற்றி அமைத்தான்.

அதனது வடிவம் தான் இன்று வடக்கில் நாம் காணும் அனைத்து அபிவிருத்திகளும்.இந்த சூழ் நிலையில் இடம் பெயர்வகளை சந்தித்த மக்கள் தாங்கள் வாழ்வதற்கு தேவையான வீடொன்றினை பெற்றுக் கொள்வதில் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும்,சங்கடங்களும்.கடவுள் வரங்கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்கமாட்டார் என்ற பழமொழிக்கதையாகிவிட்டது.தமது சொத்துக்களை,செல்வங்களை,செல்வங்களை இழந்த முஸ்லிம்கள் மன்னார் மாவட்டத்தில் நகர மத்தியில் அமைந்துள்ள பெரியக்கடை பிரதேசத்தில் வாழும் அவல நிலையினை பார்க்கும் போது.நகரத்திற்குள் வாழும் குடிசை மக்களின் கண்ணீர் கதையாகவே தோனுகின்றது.சுமார் 40 குடும்பங்கள் இந்த பெரியக் கடைப் பகுதியில் அழிந்து போகும் கிடுகுகளுக்குள்,விஷச் ஜந்துகளின் அச்சத்துக்குள் தினந்தோறும் வேதனைப்படும் துர்ப்பாக்கிய நிலையினை காணமுடிகின்றது.

ஒரே வீ்ட்டுக்குள் மூன்று குடும்பங்கள் மிகவும் கவலைப்படும அளவுக்கு தமது வாழ்க்கையினை நடத்தும் நிலையினை பார்க்கும் போது,ஏன் இம்மக்களுக்கான விடமைப்பு திட்டங்களை அரசியல் தலைமைகளும்,அரச அதிகாரிகளும் கொண்டுவர முடியாமை போனது என்பது அம்மக்களின் அங்லாய்ப்பாகும்.

இவ்வாறு அநாதரவாக வாழும் இந்த மக்கள் துயர் தொடர்பில் கண்டறிய அமைச்சர் றிசாத் பதியுதீன் அண்மையில் தமது மக்கள் பிரதி நிதிகள் சகிதம் மன்னார் பெரியக்கடை பகுதிக்கு விஜயம் செய்து அம்மக்களின் இந்த துன்பியல் வாழ்வை பார்வையிட்டார்.வீடமைப்பு திட்டம் தொடர்பில் தேவையற்ற பிழையான பிரசாரங்களை மேற் கொள்ளும் இனவாத கட்சிகள், அவலத்தடன் வாழும் இந்த மக்கள் தொடர்பில் தமது அனுதாபத்தை தெரிவிக்காது தொடர்ந்தும் காயப்படுத்தும் பணியினையே செய்கின்றனர்.

அடிப்படை வசதிகளற்ற நிலையில் மன்னார் நகருக்குள் வாழும் இந்த வறிய மக்களின் வாழ்க்கையின் வசந்தத்துக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எல்லோரும் ஒத்தாசை புரிவார்களெனில் நல்லதொரு காரியத்தை செய்து முடித்த நிம்மதியோடு எமது பயணத்தை தொடரலாம்.

விட்ட இடத்திலிருந்து தொட்டுச் செல்லும் பயணத்தை விட,புதிய பாதையில் புலகாங்கிதம் அடையும் மக்களுக்கு ஆற்றும் பணியானது  வரலாற்றுப்பதிவாகும்.


1 comment:

  1. Hon Minister I am very thankfull to you for your visit to the heart of the very poor people in the north. I also will appreciate very much and humbly request you honour
    to divert a small pprtion of your kindlness towards nuware-eliya district poor and needy muslims.

    ReplyDelete

Powered by Blogger.