கத்தாரில் தொடரும் இந்தியத் தொழிலாளிகளின் சாவு - அதிர்ச்சி தகவல்
அரபு நாடுகளில் ஒன்றான கத்தார் வரும் 2022 ஆம் வருட உலகக் கால்பந்துப் போட்டிகளை நடத்தும் உரிமையை வென்றுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போதிலிருந்தே அங்கு தொடங்கியுள்ளன. ஆனால், பிரான்ஸ் நாட்டின் பத்திரிகை நிறுவனம் கத்தாரில் கடந்த நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1000 இந்தியர்கள் இறந்துள்ளதாகவும் இதில் 500 இந்தியத் தொழிலாளிகள் கடந்த இரண்டரை வருடங்களுக்குள் இறந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மனித உரிமைக் குழுக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தத் தகவல் கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து தகவல் அறியும் உரிமை மனு மூலம் பெறப்பட்டதாகக் கூறப்படுகின்றது. சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் இது மிக உயர்ந்த இறப்பு விகிதம் என்று குறிப்பிட்டதாக பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
உலகக் கோப்பைக்கான கட்டுமானப் பணிகள் பெரும்பாலும் தென் ஆசியாவில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களால் செய்யப்படுவதால் கத்தாரின் மனித உரிமை சாதனை இத்தகைய பரிசீலனையில் உள்ளது என்று கூறும் அந்த செய்தி சர்வதேச மன்னிப்பு சபை அங்கு தொழிலாளர்கள் விலங்குகள்போல் நடத்தப்படுவதாகத் தெரிவித்ததுடன் அல்லாமல் அவர்கள் நிலையை மேம்படுத்த வற்புறுத்துமாறு உலக கால்பந்து சம்மேளனமான பிபாவையும் கேட்டுக்கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் இதனை மறுத்துள்ள இந்தியத் தூதரகம் பொருத்தமற்ற முறையில் இத்தகைய புள்ளிவிவரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. கத்தாரில் புலம் பெயர்ந்துள்ள வெளிநாட்டவர்களில் இந்திய சமூகம் பெரிய எண்ணிக்கையில் விளங்குகின்றது. கடந்த 2012ஆம் வருட இறுதியில் அங்கு 5 லட்சம் இந்தியர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 1.9 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட அந்த நாட்டில் 26 சதவிகிதமாகும்.
இதில் பெரும்பான்மையானோர் தொழிலாளப் பிரிவைச் சேர்ந்த நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்களே ஆவர். மேலும், இந்தியர்களின் மொத்த எண்ணிக்கையைக் கணக்கிடும்போது 2010ஆம் ஆண்டில் 233, 2011ல் 239, 2012ல் 237, 2013ல் 241 மற்றும் 2014ல் இதுவரை 37 பேர் இறப்பு என்ற கணக்கீடு சாதாரணமானது ஆகும். அதிலும் பெரும்பான்மையானோர் இயற்கை காரணங்களினாலேயே இறந்துள்ளனர் என்பது அரசுத் தகவல்களில் தெரிகின்றது.
இந்த அளவிற்கு இந்தியத் தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டுள்ள கத்தார் அரசுக்கு நன்றி கூறியே இந்தியத் தூதரகம் மேற்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளது.
Post a Comment