Header Ads



கல்முனையில் ஆடு, மாடு, கோழி அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை - நிஸாம் காரியப்பர்

( ஏ.எல்.ஜுனைதீன் )

அம்பாறை மாவட்டத்தில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட விலங்குகளை அடுத்த மூன்று மாத காலத்திற்கு அறுக்க முடியாது என தடை விதித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக பரவும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். 

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் விலங்குகள் அறுக்கும் செயற்பாட்டை வழமை போன்று முன்னெடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

விலங்குகளுக்கு நோய் பரவுமாயின் எடுப்படவேண்டிய நடவடிக்கை தொடர்பாகவே வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளிவந்துள்ளது. 

அதன் பிரகாரம் கல்முனை மாநகர எல்லைக்குள் அறுக்கப்படும் விலங்குகளுக்கு நோய் இல்லை என்பதை கல்முனை மாநகர சபையின் மிருக வைத்திய அதிகாரி உறுதிப்படுத்திய பின்னர் அவற்றை அறுக்க முடியும். 

இது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு விலங்குகள் அறுக்கப்படும் செயற்பாடுகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

ஆகையினால் மக்கள் இது விடயத்தில் குழப்பமடைய தேவையில்லை எனவும் விலங்குகளை மிருக வைத்திய அதிகாரியின் அத்தாட்சிப்படுத்தலுடன் முறையான விதி முறைகளுடன் அறுப்பதற்கும் இறைச்சி வகைகளை பொது மக்கள் உண்பதற்கும் எவ்வித தடையும் இல்லை என்றும் கல்முனை முதல்வர் நிஸாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.