Header Ads



யெமன் நாட்டின் தூதுவர் காத்தான்குடி விஜயம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை , இந்தியா ,மாலைதீவு  ஆகிய நாடுகளுக்கான யெமன் நாட்டின் தூதுவர் கலாநிதி கதீஜா றத்மன் முஹம்மட் கானம் தலைமையிலான குழு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் இன்று 11 -2 செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு -காத்தான்குடி பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

விஷேட ஹெலிகொப்டர் விமானம் மூலம் மட்டக்களப்பு விமான நிலையத்தை வந்தடைந்த இத் தூதுக்குழுவை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.

காத்தான்குடி விஜயம் மேற்கொண்ட யெமன் நாட்டு தூதுவர் கலாநிதி கதீஜா றத்மன் முஹம்மட் கானம் தலைமையிலான குழுவினரை காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் அஸ்பர் தலைமையிலான நகர உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்களினால் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து காத்தான்குடி நகர சபையில் யெமன் நாட்டு தூதுவர் கலாநிதி கதீஜா றத்மன் முஹம்மட் கானத்துக்கும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும்  நகர சபை முக்கியஸ்தர்கள் ஆகியோருக்கிடையில் விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றது. 

இதில் எமன் நாட்டு முஸ்லிம்களுக்கும் காத்தான்குடி முஸ்லிம்களுக்குமிடையிலுள்ள பழக்க வழக்கங்கள் ,தொடர்புகள் மற்றும் யெமன் நாட்டு ஹதரல் மௌத் மாகாணத்துக்கும் காத்தான்குடிக்குமிடையில் உடன்படிக்கை செய்வதற்கான யோசனைகள் சம்மந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

இதன் போது யெமன் நாட்டு தூதுவர் கலாநிதி கதீஜா றத்மன் முஹம்மட் கானத்துக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நகர சபைத் தவிசாளர் அஸ்பர் ஆகியோரினால் நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.




No comments

Powered by Blogger.