Header Ads



தொடர்ச்சியாக தோல்வியடைந்து வரும் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிப்பதில் பயனில்லை - அசாத் சாலி

(Adt) ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்கப் போவதில்லை என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். 

நடைபெறவுள்ள தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர்களுக்கு வேட்பு மனு வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

எனவே தொடர்ச்சியாக தோல்வியடைந்து வரும் கட்சிக்கு ஆதரவளிப்பதில் பயனில்லை என்பதால் ஐதேகவிற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்காதிருக்க முடிவு செய்துள்ளதாக அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்திருந்த அசாத் சாலி அதிலிருந்து விலகி கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸுல் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 

பின்னர் எதிர்கட்சிகளின் எதிர்ப்பு என்ற அமைப்பில் இணைந்து செயற்பட்ட அசாத் சாலி, கடந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 

தற்போது அவர் மத்திய மாகாண சபையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

4 comments:

  1. vot panniya angalukku seruppala adikka wendum

    ReplyDelete
  2. Dear Brother m r m basher, we casted vote for him. not for unp. akurana muslim, canada

    ReplyDelete
  3. அப்படியானால் வெற்றி பெறும் அல்லது பெறப்போகும் கட்சியான ஐக்கிய மக்கள் முன்னனிக்கு ஆதரவு வழங்க முடிவு செய்து விட்டீர்களா? உண்மையில் தோல்விகளுக்கு தலைமை தாங்கும் 'ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தரமாட்டேன்' என்று சொல்லியிருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன் அதே நேரம் பல தோல்விகளை சந்தித் நீங்கள் கடைசியாக UNP யின் உதவியுடன்தான் அதுவும் கண்டி மாவட்டத்தில் போட்டடியிட்டு வெற்றியடைந்தீர்கள். இது 'கறிவேப்பிலை'யின் கதை மாதிரியல்லவா தெரிகிறது....!!!!!

    ReplyDelete
  4. எல்லா முஸ்லீம் அரசியல் வாதிகழுடைய நோய்த்தான் இவருக்கும் பிடித்ததிருக்கிறது. இவர் என்ன தூக்க்ட்தில் இருந்து விழித்த்திருக்கிறாரோ? கண்டியில் நீங்கள் கேட்கும்வரை U N Pவென்ரா இருந்ததத்து மனப்பால் குடிக்க வேண்டாம் சாலி BR: நீங்கள் கண்டியில் வென்றது அனுதாப வாக்கில். உங்களின் இந்த செய்திக்குப்பிரகு எந்தக்கட்சியிலும் முஸ்லீம்கள் வாக்கு???????.

    ReplyDelete

Powered by Blogger.