வீடுகளில் பணிபுரிய பிற இடங்களில் இருந்து வருகை தருவோர் குறித்து அவதானம் செலுத்துங்கள்
வீடுகளில் பணிபுரிவதற்காக பிற இடங்களில் இருந்து வருகை தருவோர் தொடர்பாக அவதானமாக செயல்படும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஊடகவியலாளர் மேல் குணசேகர கொலை தொடர்பில் தகவல் வெளியிடும், செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகன இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
ஊடகவியலாளரை கொலை செய்தவர் நேற்றைய தினம் தொம்பே பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்டவர் பண்டிகை காலத்தின் போது, ஊடகவியலாளர் வீட்டில் நிறப்பூச்சு பணிகளுக்காக அமர்த்தப்பட்டவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான வெளியார்கள் தொடர்பில் அவதானத்துடன் செயல்படுவதன் மூலம் அனர்த்தங்களை தவிர்த்துக் கொள்ள முடியும் எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகன குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment