டைட்டானிக்கை மூழ்கடித்த பனிப்பாறையின் தற்போதைய நிலை
மூழ்கவே மூழ்காது என்ற கோஷத்துடன் 1912ஆம் ஆண்டு புறப்பட்ட டைட்டானிக் கப்பல், அதன் முதல் பயணத்திலேயே, அட்லான்டிக் கடலில் விபத்துக்குள்ளாகி மூழ்கக் காரணமாக இருந்த ஜகோப்ஷவ்ன் பனிப்பாறை தற்போது அதிகமாக உருகி, கடலில் வேகமாக நகர்ந்து வருகிறது.
உலகின் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக, பனிப்பாறைகள் உருகி, உலகின் நீர்மட்டம் அதிகரிக்கும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், டைட்டானிக் கப்பலுக்கு வில்லனாக இருந்த ஜகோப்ஷ்வன் பனிப்பாறையும் உருகுவதால், அது கடலில் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால், அட்லாண்டிக் கடலின் நீர்மட்டம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment