மஸாஹீர் (நளிமி) எழுதிய ' காலித் மௌலவி சமூக மாற்றத்திற்காக உழைத்த ஒரு மாமனிதர்' நூல் வெளியீட்டு விழா
ஒரு தனி மனிதனின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து மதிப்பீடு செய்யும் போது அவர்களுடைய நல்ல பணிகளை மேலும் தொடர்வதற்கு தம் சமூக இருப்பை அடையாளப்படுத்துவதற்கும் பெரியளவு பங்களிப்புச் செய்கின்றது . இத்தகைய பணிகைள எமது இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் செய்துள்ளார் என்று முன்னாள் ஜாமியா நளீமியா விரிவுரையாளர் உஸ்தாத் எம். ஏ. எம். மன்சூர் தெரிவித்தார்.
நியூஸ் வீயூ பத்திரிகையின் ஏற்பாட்டில் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷட விரிவுரையாளரும் மலேசியாவில் இறுதி வருட கலாநிதி பட்டப்படிப்பை நிறைவு செய்யும் ஆய்வாளருமான அஷ;nஷய்க் எஸ். எம். எம். மஸாஹீர் (நளிமி) எழுதிய ' காலித் மௌலவி சமூக மாற்றத்திற்காக உழைத்த ஒரு மாமனிதர்' என்ற நூல் வெளியீட்டு விழா அக்குரணை அஸ்ஹர் தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் முன்னாள் ஜாமிஆ ரஹ்மானிய்யா அரபுக் கல்லுரி அதிபர் ஜிப்ரி ஹஸ்ரத் தலைமையில் 04-02-2014 நடைபெற்றது. இந்நிகழ்வில் நூல் பற்றி விமர்சன உரைநிகழ்த்திய முன்னாள் ஜாமியா நளீமியா விரிவுரையாளர் உஸ்தாத் எம். ஏ. எம். மன்சூர் அங்கு இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
ஸஹாபாக்களுடைய வரலாறு அல்லது முஸ்லிம் சமூகத்தில் வாழ்ந்து விட்டுச் சென்ற முஅத்திஸ்ஸுடைய வரலாறு அல்லது ஏனையவர்களுடைய வரலாற்றை ஆராய்வதற்கு பெரியதொரு உதவியாக இருக்கின்றது. அவர்கள் வாழ்ந்த காலம் அவர்கள் செய்த சேவைகள் எல்லாம் நாங்கள் ஆராய்ந்து பார்க்கின்றபோது சமுகத்தைப் பற்றி பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ள முடிகின்றது. அக்குரணையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தலைவர்கள், சமூகப் பணியாளர் பற்றிய பல நூல்கள் எங்களிடத்திலே காணப்படுமாக இருந்தால் அந்த நூல்கள் மூலமாக அக்குரணை பற்றிய நிறையத் தகவல்களைப் பெறக் கூடியதாக இருக்கும். துரதிருஷடவசமாக அப்படியான நூல்களை நாங்கள் காண்பது மிகக் குறைவாகும். அந்த இடைவெளியை நிரப்புகின்ற வகையில் மௌலவி காலித் அவர்களுடைய சேவை பணிகளைச் சொல்லுகின்ற பெறுமதிபெற்ற நூலாக அமைக்கின்றது. இந்த நூல் வெறுமனே கருத்துத் தொகுப்பு நூலாக மட்டும் கொள்ளாமல் அவற்றை மதிப்பீடு செய்யக் கூடியவர்களாகவுகம் நாங்கள் இருக்க வேண்டும்.
குறிப்பாக சிறுபான்மை சமூகமாக வாழக் கூடிய எங்களுக்கு நாங்கள் தான் உழைத்துப் பாடுபட வேண்டுமே ஒழிய அரசு எங்களுக்கு உதவி செய்யக் கூடியதல்ல. நாங்கள் உழைத்துப் பாடுபட்டால் மாத்திரம் தான் எங்கள் சமூகத்தை கட்டி வளர்ப்பது சாத்தியமாகும் எனவே எங்களுடைய சமூகத்தில் தோன்றுகின்ற இப்படியான தலைவர்கள் ஆளுமைகள் இத்தகையவர்களைப் பாராட்டுவதோ இப்படி அவர்களுடைய பணிகளை மதிப்பீடு செய்வது அவர்களுடைய பணிகளை எவ்வாறு கொண்டு செல்வது என ஆராய்வது எங்களுக்கு மிகவும் முக்கியமாக இருக்கிறது.
நாங்கள் நளிமி ஹாஜியார் எடுத்துக் கொண்டாலும் சரி காலித் மௌலிவியை எடுத்துக் கொண்டாலும் சரி இன்னும் பலரை எடுத்துக் கொண்டாலும் சரி பெரிய ஆழ்ந்த படித்தவர்களாகவேர் பட்டம் பெற்றவர்களாகவோ இல்லாமல் இருப்பதை நாங்கள் அவதானிக்கின்றோம். ஒரு மௌலவியாக் கூட இல்லாமல் ஒரு இரண்டு மூன்று வகுப்புப் படித்து விட்டு பெரும் பணியை செய்து காட்டியுள்ளார். இதை விட உயர்ந்தவர்கள் ஏன் சமூகப் பணியாளர்களாக இல்லாமல் இருக்கின்றார்கள். ஏன் சமூகத்தை வழிநடத்துவதற்கு இயலாமற் பொகின்றது. ஏன் சாதாணர துறையிலுள்ளவர்கள் சமூகத்திற்கு பெருமளவுக்கு சேவை சேய்யக் கூடியவர்களாக மாறுகிறார்கள் என்று இப்படியான ஆய்வுகளுக்கும் முடிவுகளுக்கும் வருவதற்கு இத்தகைய நூல்கள் மிகப் பிரயோசனமாதாக அமையும் எனக் கருதுகின்றேன்.
ஒருவர் உயிரோடு இருக்கும் போதே அவரது சேவையைப் பாராட்டி உற்சாகத்தையும் கொடுத்தால் நிச்சயம் அதில் பெறுமானம் இருக்கும்.
இந்நிகழ்வில் வரவேற்புரையை நியுஸ் வியூ பத்திரிகையின் ஆசிரியர் இர்பான் நிகழ்த்தியதோடு சிறப்புரையின புர்க்கானிய்யா அரபுக் கல்லூரி அதிபர் எச். உமர்தீன் (ரஹ்மானி ) நிகழ்த்தினார் ஏற்புரையை நுலாசிரியர் எஸ். எம். எம். மஸாஹீர் வழங்கினார். இறுதியில் காலித் என்ற நிதி நிறுவனம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
Post a Comment