யாசகர்களை கைது செய்யும் விசேட நடவடிக்கை ஆரம்பம்
யாசகர்களை கைது செய்யும் விசேட நடவடிக்கை ஒன்றை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். நேற்றைய தினம் இரவு 39 யாசர்கள் கொழும்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கும் நோக்கில் இவ்வாறு காவல்துறையினர் யாசகர்களை கைது செய்து வருகின்றனர்.
யாசகர்கள் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்பு பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது என காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்டவர்களில் சிலர் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர்களில் ஏழு பெண்களும் அடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
Post a Comment