Header Ads



கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியக் கலாநிதி ஏ. எல். அலாவுதீன் நியமனம்

(Dr. N. Ariff)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக, கிழக்கு மாகாண பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியக் கலாநிதி ஏ. எல். அலாவுதீன் அவர்கள் 21. 02. 2014 வெள்ளிக்கிழமையன்று உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு தனது இடமாற்றத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். 

அக்கரைப்பற்றைப்; பிறப்பிடமாகவும், சாய்ந்தமருதில் திருமணமும் முடித்துள்ள இவர,; பல்வைத்திய நிபுணராக தனது கடமையை ஆரம்பித்து, தனது அயராத முயற்சியினால் இந்த நிலையை எட்டியுள்ளார். அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பிராந்திய பல்வைத்திய நிபுணராக கடமையாற்றிய இவர், சுகாதார நிருவாக சேவைக்குள் நுழைந்து கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலை மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகராக தனது நிருவாக சேவையை திறம்பட வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாண பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய காலப்பகுதிக்குள் இவர் சிறிது காலம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் தற்காலிக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது இடமாற்றத்தை வரவேற்கும் கல்முனை பிராந்திய சுகாதார சேவையின் சகல மட்டத்தைச் சேர்ந்தவர்களும், இவர் ஏனைய உத்தியோகத்தர்கள், ஊழியர்களுடன் சிறந்த சுமுகமான, மென்மையான  தொடர்பை பேணக்கூடியவர் என்றும், இவரது காலப்பகுதியில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவையில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஐந்து வருடங்களாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியக் கலாநிதி எம். எஸ். இப்றாலெப்பை அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இடமாற்றம் பெற்றுச் செல்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

2 comments:

Powered by Blogger.