Header Ads



ஏன் முன்னரைப் போன்று என்னுடன் பாசம் இல்லை..? ஜனாதிபதியிடம் கேட்ட ஹிருனிக்கா (வீடியோ)

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர, கொட்டிகாவத்தை பகுதியில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்தார்.

ஹிருணிக்கா பிரேமச்சந்திரவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது அவர் தெரிவித்ததாவது;

“ஜனாதிபதியை சந்திப்பதற்காக நான் சென்றிருந்தேன்.  ஏன் முன்னரைப் போன்ற பாசம் தற்போது என்மீது கிடையாது என்று நான் வினவினேன். அவ்வாறு இல்லை மகளே! எந்த பிரச்சினையும் கிடையாது. செல்லும் இடம் எல்லாம் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கின்றீர்கள் என்றார். அரசாங்கத்தைத் திட்டவில்லை என நான் கூறினேன். எனது தந்தைக்கு எதிராக அரசாங்கம் எந்தவித செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை. நான் அரசாங்கத்திற்கு எதிரான நபர் அல்ல. நான் தனிப்பட்ட ஒருவருக்கு எதிராகவே செயற்படுகின்றேன்.

அதற்கு ஜனாதிபதி, எதிர்க்கட்சிகள் தனக்கு எதிராக வேறுபட்ட விமர்சனங்களைக் கூறுவதாகவும், தான்  அவர்களுக்கு எதிராக எந்தவித கருத்தையும் வெளியிடுவதில்லையெனவும் அவர் கூறினார். அதேபோன்று, யார் அபகீர்த்தியேற்படுத்துகின்றார்களோ அவர்களே அபகீர்த்தி அடைகின்றனர். இறுதியில் அதனை செய்தவர்களே அபகீர்த்தியை எதிர்நோக்குவார்கள் எனக் கூறினார்,” என்றார்.

அத்துடன், ” நாம் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்காது இருந்து, தற்போது சிறந்த பெறுபேறொன்றை மக்களிடமிருந்து பெற்றுள்ளோம். நான் சத்தமின்றி இருந்தேன். எனது அன்பான மக்கள், நியாயத்தை நிலைநாட்டுவார்கள் என நான் அறிவேன்,” என்றும் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.