நீர்கொழும்பு முஸ்லிம் கடையில் கொள்ளை - மாநகர முன்னாள் எதிர்கட்சித் தலைவர் கைது
கொள்ளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நீர்கொழும்பு மாநாகர சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் ரொயிஸ் பெர்ணான்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு நகைக்கடை ஒன்றில் கடந்த 17ம் திகதி 2 கோடி ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்த ஆரம்பகட்ட விசாரணைகளில், ரொயிஸ் பெர்ணான்டோ இந்த கொள்ளையை மேற்கொண்டிருப்பது தெரியவந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment