அக்கரைப்பற்றில் சுதந்திர தின வைபவம்
(ஏ.ஜி.ஏ.கபூர்)
இலங்கையின் 66 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திலும் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன. அக்கரைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் தலைமையில் இடம பெற்றது. சுதந்திர தின நிகழ்வின்போது உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் தேசியக் கொடியை ஏற்றி வைப்பதையும், கணக்காளர் எம்.ஐ.எம்.முஸ்தபா, திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் யூ.எல்.ஏ.ஹஸன் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் அருகில் நிற்பதையும், மேன்மை தங்கிய ஜனாதிபதிக்கும், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி துஆப் பிரார்த்தனை இடம் பெறுவதையும், நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்கான பிரார்த்தனை இடம் பெறுவதையும் கலந்து கொண்ட உத்தியோகத்தர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
Post a Comment