அமெரிக்கர்கள் ஈரானை தங்களுக்குரியது என்று கருதினார்கள் - ஈரான் அதிபர் ரூஹானி
ஈரான் இஸ்லாமிய புரட்சியின் 35-வது நினைவு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் நாட்டுமக்களுக்கிடையே அதிபர் ரூஹானி உரையாற்றினார்.
லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்ட நினைவு தின பேரணிக்குப் பிறகு ஆஸாதி சதுக்கத்தில் அதிபர் ஹஸன் ரூஹானி உரையாற்றுகையில், "வெளிநாட்டு சக்திகள் ஈரானில் தங்களது தலையீட்டை நிறுத்தியதற்கு காரணம் நமது கொள்கையாகும். அமெரிக்கர்கள் ஈரானை தங்களுக்குரியது என்று கருதினார்கள். ஈரானின் பாதுகாப்பு காரியங்களிலும் அவர்கள் தலையிட்டார்கள். இச்சூழல்களையெல்லாம் 1979ஆம் ஆண்டு நிகழ்ந்த புரட்சி முடிவுக்குக் கொண்டு வந்தது." என்று ரூஹானி தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஈரானின் அதிபராக பதவியேற்ற பிறகு ரூஹானி ஆற்றும் முதல் பொது உரை இதுவாகும்.
Post a Comment