Header Ads



கண்டி - மீராமக்கம் பள்ளிவாசலில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகள் (படங்கள்)

(JM.Hafeez)

நாட்டின் 66வது சுதந்திர தினம் கண்டி முஸ்லீம்களாலும் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. (4.2.2014)கண்டி போகம்பறை மைதானத்தில் மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் இடம் பெற்ற அணிவகுப்பு மரியாதையில் கண்டி பதியுதின் மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை இடம் பெற்றது.

பின்னர் கண்டி மீராமக்கம் பள்ளியில் இடம் பெற்ற விசேட நிகழ்வுகளில் மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரிகொப்பேகடுவ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் அங்கும் தேசிய கொடி யேற்றப்பட்டு கட்டுகலை அல்புர்கானிய்யா மத்ரசா மாணவர்களால் வாழத்துக் கீதம் இசைக்கப்பட்டு அதிதிகள் அரபு மொழியில் வாழ்த்தப்பட்டனர்.

கண்டி  சிட்டி ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் மௌலவி பஸ்லுல் அவர்களால் அங்கு வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.  மடவளை மதீனா மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்ற வை.எம்.எம்.கிளையின் சுதந்திர தின வைபவவத்தில் தென்னை மரக் கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. கண்டி மீராமக்கம் பள்ளியில் இடம் பெற்ற வைபவத்தில் மௌலவி பஸ்லுல் தெரிவித்ததாவது,

1505ம் ஆண்டு முதல் 1948ம் ஆண்டு வரை பகுதியாகவும் முழுமையாகவும் நாடு பல்வேறு சூழ் நிலைகளில் ஆக்கரமிக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் என்றும்,ஒல்லாந்தர் என்றும் போத்துக்கேயர் என்றும் சோர சேர பாண்டிய மன்னர்களாலும் அவ்வப் போது நாட்டின் இறைமை பாதிக்கப்டிருந்தது. இருப்பினும் இவர்களது வருகைக்கு மன் இருந்தே அரேபியர்களின் வருகை இருந்துள்ளது.

அன்று அராபியர்களும் பின்னர் முஸ்லீம்களும் இந்நாட்டில் மிகவும் மரியாதைக் குறியவர்களாக நடத்தப்பட்டனர். சிங்கள மன்னர்களால் வைத்திய முதயான்செலாகே, என்றும் வைத்திய ரத்ன முதியான்செலாகே என்றும் இப்படியாகப் பல்வேறு பட்ட கௌரவ நாமங்களுடன் முதலியார்களாக முஸ்லீம்கள் வாழ்ந்தனர். அவர்கள் நம்பிக்கையை வென்ற பிரதானிகளாக இருந்தனர்.

ஆவர்கள் ஒருபோதும் நாட்டை சூரையாடவில்லை. 1948ம் ஆண்டு இலங்கையில் சுதந்திரக் கொடியை டி.எஸ்.சேனாநாயக்கா அவர்கள் ஏற்றி வைக்கும் போது அரகில் டி.பி.ஜாயா போன்ற முஸ்லீம் தலைவர்கள் இருந்தார்கள். ஆன்று முதல் இன்று வரை முஸ்லீம்கள் ஒரு  போதும் நாட்டை கூறுபோடவும் இல்லை. நாட்டின் இறைமைக்கு எதிராக சதி செய்ததும் இல்லை. முஸ்லீம்களின் மரியாதை என்றும் குறைந்ததில்லை என்றும் தெரிவித்தார்.





No comments

Powered by Blogger.