சிப்லி பாரூக்கின் நிதி ஒதுக்கீட்டில் வாழ்வாதார உதவிகள்
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக்கின் 6 இலட்சம் ரூபாய் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 கிராம உத்தியோகத்தர் பிரிவில் வறுமை கோட்டிற்கு கீழுள்ள 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று 12-02-2014 புதன்கிழமை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ,மாகாண சபை உறுப்பினர் சிப்லி ஆகியோரினால் வறுமை கோட்டிற்கு கீழுள்ள 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் 17 பேருக்கு தையல் இயந்திரங்களும், 9 பேருக்கு மா அரைக்கும் இயந்திரமும்,4 பேருக்கு பாய் இழைக்கும் உபகரணமும்,4 பேருக்கு உணவுப் பண்டங்கள் தயாரிக்கும் உபகரணமும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் பிரதித் தவிசாளர் ஜெஸீம் ,உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர்,உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கருநாகரன்,நகர சபை உறுப்பினர் அலி சப்ரி உப்பட பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment