Header Ads



அட்டாளைச்சேனைக் கோட்டமட்ட விளையாட்டுப் போட்டிகள் (படங்கள்)


(எம்.ஏ.றமீஸ்)

அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கீழுள்ள அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேச பாடசாலைகளை ஒன்றிணைத்த அட்டாளைச்சேனைக் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகள் தற்போது அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நடைபெற்று வருகின்றன.

கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.கஸ்ஸாலி தலைமையில் அட்டாளைச்சேனை அஷ்ரஃப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று ஆரம்பமான15 மற்றும் 19 வயதுப் பிரிவின் கீழ் நடைபெற்ற கபடிப் போட்டியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

15 வயதுப் பிரிவின் கீழ் நடைபெற்ற முதலாவது போட்டியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவப் போட்டியாளர்களும், அறபா வித்தியாலய மாணவப் போட்டியாளர்களும் மோதிக் கொண்டனர். இதன்போது அறபா வித்தியாலய அணியினர் 12 புள்ளிகளையும், தேசிய பாடசாலை அணியினர் 44 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டனர். இப்போட்டியில் 32 மேலதிகப் புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட தேசிய பாடசாலை அணி வெற்றியீட்டியது.

15 வயதுப் பிரிவின் கீழ் நடைபெற்ற கபடிப் போட்டியின் இறுதிப் போட்டியின்போது  அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அணியும், அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலய அணியும் மோதிக் கொண்டன. இதில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அணி 44 புள்ளிகளையும் அல்-அர்ஹம் வித்தியாலய அணி 14 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டன. இதில் 30 மேலதிக புள்ளிகள் பெற்ற அட்டாளைச்சேனi தேசிய பாடசாலை அணி சம்பியனானது.

இதேவேளை 19 வயதுப் பிரிவின் கீழ் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அணியும், பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலய அணியும் மோதிக் கொண்டன. இதன்போது தேசிய பாடசாலை அணி 56 புள்ளிகளையும், மின்ஹாஜ் மகா வித்தியாலய அணி 31 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டன. இப்போட்டியில் 25 மேலதிக புள்ளிகளைப் பெற்ற அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அணி சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது.

 இப் போட்டிகளின் போது  தமது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும், மாணவர்களை வழிப்படுத்திய பாடசாலையின் விளையாட்டுத்துறைசார் ஆசிரியர்களுக்கும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிபர் மௌலவி வி.ரி.எம்.ஹனீபா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்


No comments

Powered by Blogger.