Header Ads



ஹக்கீமின் கரத்தை மேலும் பலப்படுத்தி, சமூகத்திற்கு உயரிய பணிகளை ஆற்ற வேண்டும் - எச்.எம்.எம். பாயிஸ்


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 'தாருஸ்ஸலாம்' தலைமையகத்தின் ஆறாவது மாடியில் அமைந்துள்ள கட்சித் தலைவரின் அறையில் வெள்ளிக்கிழமை (28) முற்பகல் நடைபெற்ற நிகழ்வில் தெரிவித்ததாவது, 

'எத்தனையோ பதவிகள் எனக்காக காத்துக்கொண்டிருந்த போதிலும், ஆளும் கட்சியில் இருந்து அழைப்புகள் வந்த போதிலும், தேசியக் காங்கிரஸில் இருந்து விலகி எந்தவிதமான நிபந்தனைகளுமில்லாமல் முஸ்லிம் காங்கிரஸை வழிநடத்தும் தலைவர் அமைச்சர் ஹக்கீமின் கரத்தை மேலும் பலப்படுத்தி, சமூகத்திற்கு உயரிய பணிகளை ஆற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் நான் இக் கட்சியோடு இணைந்து கொள்கின்றேன். 

மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் எவ்வாறு இக் கட்சியை வழிநடத்தினாரோ, அவ்வாறே தலைவர் ஹக்கீமும் கட்சியை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பதவிகள் எவற்றையும் எதிர்பார்க்காமல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் நான் மனப்பூர்வமாக சங்கமிக்கின்றேன். 

முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளையும், தனித்துவத்தையும் நிலை நிறுத்தும் ஒரே கட்சியாக நான் முஸ்லிம் காங்கிரஸையே காண்கிறேன். தற்பொழுது நாட்டில் நிலவும் சூழல் காரணமாக எமது சமூகம் சார்ந்த எதிர்பார்ப்புகளை அடைய முடியாத நிலைமை உருவாகியுள்ளது. 
இவ்வாறிருக்க எமது சமூகத்தை கூறுபோடுவதற்கு சிறு சிறு கட்சிகள் எத்தனிக்கின்றன. 

எனவே, இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களும், அனைத்துக் குழுக்களும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கீழ் ஒன்றுபடுவது காலத்தின் தேவையாகும். இதனை உணர்ந்தவனாக இவ்வாறான முடிவை மேற்கொண்டேன் '; என்றார். 

4 comments:

  1. நிச்சயமாக இவரின் 'கரத்தை' பலப்படுத்துவது என்பது..... முஸ்லீம்களது உரிமைகளுக்கு 'வேட்டு' வைப்பது போலிருக்குமே....?

    ReplyDelete
  2. என்ன​ அப்படி தலைவர் சேஞஂசிடாரு அவர் ஒரு குருடு,செவிடு,நீங்கலும் சேர்ந்தா எமது சமூகத்த அல்ல௱தான் பாதுகாக்கனும்.

    ReplyDelete
  3. முஸ்லிம் காங்கிரசை பலப்படுத்தவும்

    ReplyDelete
  4. ivangal ellam muslim muslim endru muslimgalukku
    mannawaripota kootam ivangala nambi nanga seranumam
    ivarhalidam irundu namatu samoohatai kapatruwayaha ameen

    ReplyDelete

Powered by Blogger.