Header Ads



காணாமல் போனோர் குறித்த ஆணைக்குழு தொடர்பான விசாரணை புத்தளத்திலும் நடாத்தப்பட வேண்டும்

காணாமல் போனோர் குறித்த ஆணைக்குழு தொடர்பான விசாரணை புத்தளத்திலும் நடாத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் குறித்த ஆணைக்குழு தொடர்பான விசாரணை புத்தளத்திலும் நடாத்தப்பட வேண்டுமென சமத்துவத்திற்கான யாழ் சிவில் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக குறித்த ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் '1990ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வியாபாரம் செய்து வந்த சுமார் 35 ற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் வவுனியாவிற்கும் யாழ்ப்பனத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் காணாமல் போயினர்.

அவர்களின் உண்மை நிலை இன்னும் அறியப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது. அவர்களின் உறவுகள் இன்னும் துன்ப துயரங்களை மனதில் சுமந்தவர்களாக புத்தளத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அதுமாத்திரமின்றி மனோவியல் பாதிப்புகளுக்கும் உள்ளாகியுள்ளனர்.

எனவேஇ காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை 1990ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு புத்தளத்தில் வாழ்ந்துவரும் முஸ்லிம் மக்களுக்கும் மேற்கொள்ளப்படவேண்டுமென வேண்டிக்கொள்கிறோம்' என சமத்துவத்திற்கான யாழ் சிவில் அமைப்பு தெரிவித்துள்ளது. 


No comments

Powered by Blogger.