முஸ்லிம்களும் குழந்தைகளை தத்தெடுக்கலாம் : உச்ச நீதிமன்றம்
(Inne) இந்தியா - முஸ்லிம்களும் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ஷப்னம் ஆஸ்மி என்ற பெண்ணுக்கு குழந்தை தத்தெடுப்பது மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இது குறித்த நீண்ட கால விசாரணைக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் நேற்று இதற்கான தீர்ப்பை அளித்தது. அதில், "இந்திய அரசியலமைப்பின் 44ஆவது பிரிவில் குறிப்பிட்டுள்ளபடி, சீரான குடியுரிமையியல் சட்டம் வெளியிடப்படும்வரை தனிப்பட்ட சட்டத்தைவிட ஒரு நாட்டின் சட்டங்களே முன்னுரிமை பெறும். இஸ்லாமியர்களின் தனிப்பட்ட சட்டம் இதனைத் தடுத்தாலும் முஸ்லிம்களுக்கும் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் உரிமை உண்டு
தத்தெடுக்கும் உரிமை என்பது ஒரு நாட்டின் சட்டத்தின் மூலம் அளிக்கப்படுவதாகும். இதனைத் தனிப்பட்ட எந்த சட்ட விதிகளும் தடுக்க முடியாது. அனைத்துத் தனி நபர்களுக்கும் இந்த சட்டரீதியான அடிப்படை உரிமை உண்டு என்ற போதிலும் அதனை அறிவிப்பதற்கான காலம் இன்னும் கனியவில்லை."
இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment