தேசிய சமாதானப்பேரவையின் அம்பாரை மாவட்ட சர்வ சமய குழுவின் கூட்டம்
தேசிய சமாதானப்பேரவையின் அம்பாரை மாவட்ட சர்வ சமய குழுவின் கூட்டம் நேற்று 2014.02.02 நடைபெற்றது.
ஆட்டாளைச்சேனை ட்ரு10 விஷன் அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அம்பாரை மாவட்டத்தில் உள்ள சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையை மேலும் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது எதிர் காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதில் தேசிய சமாதானப்பேரவையின் முக்கியஸ்த்தரான சமன் செனவிரட்ன ட்ரு10 விஷன் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி எம்.ஏ.ஸி.உவைஸ் தென்கிழக்குப்பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய கற்கைகள் பிரிவின தலைவர் கலாநிதி எம்;.ஜ.எம்.ஜெஸீல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment