Header Ads



கல்முனையில் நாளை சனிக்கிழமை மின்வெட்டு இல்லை

(யு.எம்.இஸ்ஹாக்)

நாளை 22.02.2014 இலங்கை மின்சாரசபை கல்முனைப் பிராந்திய பொறியியலாளர் பிரிவுக்குள் அமுல் படுத்தவிருந்த  மின் வெட்டு கட்டளை  நீக்கப் பட்டுள்ளதாகவும் மின்சாரம் தொடர்ந்து இயங்கும் எனவும்  கல்முனை பிராந்திய பொறியியலாளர் எம் .ஆர் .எம்.பர்ஹான் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

நாளை மின்சாரம்  காலை 7.30 தொடக்கம் மாலை 6.00 மணி வரை திருத்த வேலை காரணமாக தடைப்படும் என தெரிவிக்கப் பட்டிருந்தது. மின்சார தடை  இடம் பெறாது என  இன்று மாலை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன பிறை எப்.எம். வானொலிக்கு  மின் பொறியியலாளர் எம் .ஆர் .எம்.பர்ஹான் அறிவித்தல் வழங்கி இருந்தார் . இது தொடர்பாக அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் தொடர்பு கிடைக்கவில்லை .

No comments

Powered by Blogger.