Header Ads



கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு

(Samsudeen siyan)

ஒலுவில் மாவட்ட வைத்தியசாலை இல்  நேற்று  இடம்பெற்ற நிகழ்வொன்று மிகவும் மனதை வேதனைக்கு உள்ளாக்குகின்றது. நேற்று முன் தினம் கடலுக்கு சென்று நீராட போன மூன்று நபர்களில் காணாமல் போன ஒருவரின் ஜனாஸா இன்று கரை ஒதுங்கி உள்ளது.

கடலுக்கு குளிக்க சென்ற மற்ற இருவரும் அவசரமான நிலை இல் ஒலுவில் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்ல பட்ட நேரத்தில் அங்கு வைத்தியர்கள்,தாதியர்கள் எவரும் இருக்கவில்லை. அந்த நபர்கள் இருவரின் அவசர நிலயை அறிந்து கொண்டு அங்கு இருந்த பொது நபர்களால் வேறு வைத்தியசாலைக்கு அவர்களை கொண்டு  சென்று  இருக்கிறார்கள் . 

ஒலுவில் பிரதசத்தில் அமைக்க பட்ட அந்த வைத்தியசாலை,   அரசாங்கத்தால் வைத்தியர்கள்,தாதியர்களுக்கு  வழங்கப்படும் சம்பளம்  என்ன நோக்கத்துக்காக வழங்கப்படுகிறது என்று தெரியவில்லை.  அவசரமான நிலைல் கொண்டு செல்லப்பட்ட அந்த இருவரும் வேறு வைத்தியசாலைக்கு ஏன் கொண்டு செல்லப்பட வேண்டும். 

அங்கு பணி புரிந்த வைத்தியர்களும் தாதிமார்களும் எங்கு சென்றார்கள் இது குறித்து முழுமாயாக ஆராயப்படும் என்று நம்புகிறோம். 

அதுமட்டுமல்லாது இன்னும் பல இழிவான நிலைப்பாடுகள் அந்த வைத்தியசாலைஇல் இடம்பெறுவதாக தகவல் கிடைத்தது கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவதிக்கு வரும் நேரத்தில் அவர்களை ஒழுங்காக கவனிப்பதில்லை என்ற புகாரும், முதியவர்கள் வைத்தியசாலிக்குள் நுழைந்தால் அவர்களை நாய்களை விட கேவலமாக பார்க்கும் ஒரு குற்ற சாட்டும் எமக்கு கிடைத்துள்ளது . அமைச்சர் அவர்களே அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அவர்கள் வைத்தியசாலைக்கு மட்டும் பணி புரிய வேண்டும் என்றும் இது போன்ற இழிவான நிலைப்பாடுகள் இனி மேலும் நடக்காமல் இருப்பதற்க்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் விநாயமாய் கேட்து கொள்கிறோம் . 

1 comment:

  1. Humbly requesting to consider this petition by the Hon. Minister

    ReplyDelete

Powered by Blogger.