புத்தளம் மன்னார் வீதி மூடப்படுமா..?
(முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்)
புத்தளம் மன்னார் வீதியை நிரந்தரமாக மூடுவதற்குரிய சட்ட நடவடிக்கைகளில் சுற்றாடல் ஆர்வலர் என்ற ஒரு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.இவ்வீதி வடமாகாண தமிழ் ,முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் கிடைத்த ஒரு பெரும் வரப்பிரசாதமாகும்.இவ்வீதி மூடப்படாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு. யாழ்ப்பாணத்திற்கான துரித கரையோரப்பாதையாக இவ்வீதி மிளிரவுள்ளது. புத்தளம் இலவங்குளம் வரையும் மறிச்சிக்கட்டி மன்னார் வரையும் காபட் வீதி போடப்பட்டுள்ளது. மறிச்சிக்கட்டிக்கும் இலவங்குளத்திற்கும் இடையேயான வீதிகளை அபிவிருத்தி செய்வதில் தடைகள் காணப்படுகின்றன.
இவ்வீதி தொடர்பாக தமிழ் மக்களும்,முஸ்லிம் மக்களும் இணைந்து ஆயிரக்கணக்கான மக்களின் கையொப்பங்களைத் திரட்டி அத்துடன் இது தொடர்பான மஹஜரை ஜனாதிபதியிடமும் ,சுற்றாடல் அமைச்சரிடமும் கையளித்தல் வேண்டும்.தேவையேற்படின் இவ்வீதியை பாதுகாப்பதற்காகவும் ,மக்கள் பயன் பெறவும் சட்டரீதியாக வழக்குகளை தாக்கல் செய்து வெற்றி கொள்ளலாம். இவ்விடயம் தொடர்பாக முசலிப்புத்திஜீவிகள் குழுவொன்றும் அதிக முயற்சிகளில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக வடமாகாணத்தின் தென்கரையோரமான முசலிப் பிரதேச முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயங்களுக்கு இவ்வீதி பெரிதும் பயன்படுகிறது.இவ்வீதியின் மூலம் பயன நேரம், பயணத்தூரம்,பயனச் செலவு என்பன குறைவாக உள்ளன. இது யுத்தத் தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு பெரும் பாக்கியமே ,இவ்வீதியின் ஆரம்பத் திறப்பு விழாவுக்காக பாடுபட்ட அமைச்சர் றிசாத் பதியுதீன் ,பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ ,ஹுனைஸ் பாரூக் போன்றோர் இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசி உரிய தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் எதிரபார்க்கின்றனர்.
Post a Comment