''அல்லாஹ் பார்க்கின்றான்'' - அரேபிய பாலைவனம் நடுங்கியது (வீடியோ, படம் இணைப்பு)
சில நாட்களுக்கு முன் அரேபியாவில் பாலை வானத்தில் இடம் பெற்ற ஒரு உரையாடல் பதியப்பட்டு யூடியுபில் வலம் வந்தது. அதன் சுருக்கம்,
சில வாலிபர்கள் ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு ஆடு மேய்க்கும் வாலிபரை சோதிப்பதற்காக தமக்கு ஒரு ஆட்டை 200 ரியாலுக்கு தந்து பின்பு உரிமையாளரிடம் காணாமல் போய் விட்டதாக பொய் செல்லுமாறு கூற, அதற்கு அந்த இடையன் 2 இலட்சம் தந்தாலும் முடியாது என்கிறான்.
அப்போது அவர்கள் இங்கு யாரும் பார்க்கவில்லையே, என்று கூறியதற்கு அல்லாஹ் பார்க்கின்றான் என்று கூறியது உண்மையில் மனதை உறுத்துகின்றது. பல கோடிகளை சுரண்டி ஏப்பமிடும் தனவந்தர்கள் இருக்கும் இக்காலத்திலும் இப்படியான நேர்மையான ஏழைகள்தான் அல்லாஹ்வை பயந்தவர்கள்.
என்றாலும் அல்லாஹ் அவருக்கு அதைவிட 10 மடங்கு ஹலாலாக கொடுத்துவிட்டான். அல்ஹம்துலில்லாஹ்..!
தமாமில் வசிக்கும் ஹமத் அல்ஹுஸைனி என்ற தனவந்தர் முதலில் இவர் தனது பெயரை வெளியிட மறுத்தவர் மற்றவர்களுக்கு படிப்பினையாக இருக்க வேண்டும் என பலர் வற்புறுத்தியதால் பெயரை வெளியிட்டார். 20000 ரியால்கள் அன்பளிப்பாக அறிவித்து விட்டார்.
பத்து மடங்கள்ள நூறு மடங்கு
ReplyDelete