Header Ads



பௌத்த பிக்கு தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி - காலி விகாரைக்கு அருகில் சம்பவம்

காலி பிரதேசத்தில் விகாராதிபதியான பிக்கு ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலி மாவட்ட, மாவடவில ஸ்ரீ தீபாராம விகாரையின் விகாராதிபதியான புளத்சிங்களே தம்மாலோக்க தேரர் இன்று 02-02-2014 அதிகாலை விகாரைக்கு அருகில் தனது உடலில் எண்ணெயை ஊற்றி தீ மூட்டிக் கொள்ள முயற்சித்துள்ளார்.

அப்போது விகாரையில் இருந்த உதவியாளர்கள், அறநெறி பாடசாலை மாணவர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து அதனை தடுத்து நிறுத்தியுள்ளார்.

விகாரைக்கு அருகில் இருக்கும் தேவாலயம் ஒன்றில் தொடர்ந்தும் ஜெபக் கூட்டங்களை நடத்தி வருவதே இவர் தீக்குளிக்க முயற்சித்தமைக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தேவாலயம் விகாரைக்கு அருகில் இருப்பது பிரச்சினையாக இருப்பதாகவும் அதனை அங்கிருந்து அகற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் பிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

1 comment:

  1. சாவப் போகிறவனை செத்துத் தொலை என்று விட்டுவிடாமல் ஏன் தடுக்க வேண்டும். இது ஒரு நாடகம். மாற்று மதத்தினருக்கு அநீதியிழைக்க புதிய யுக்தி.

    ReplyDelete

Powered by Blogger.