Header Ads



ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர் சிறையில் மரணம்!

வங்காளதேசத்தின் மூத்த ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் ஏ.கே.எம்.யூசுஃப் சிறையில் வைத்து மரணமடைந்தார். 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரின் போது அந்நாட்டிற்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணையை சந்தித்து வந்தார் யூசுஃப். அவருக்கு வயது 87. 

காஷிம்பூர் சிறையில் உள்ள அறையில் நேற்று காலை மயங்கி கீழே விழுந்தார். பங்கபந்து ஷேக் முஜீப் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை என்று சிறைத்தலைவர் ஃபர்ஹான் அலி தெரிவித்தார். மாரடைப்பு மூலம் மரணம் நேர்ந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

15 போர்க்குற்றங்கள் சுமத்தி கடந்த ஆண்டு மே மாதம் ஷேக் ஹஸீனா அரசு யூசுஃபை சிறையில் தள்ளியது. அவரது வயதை கவனத்தில் கொண்டு ஜாமீன் அனுமதிக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். Thoo

No comments

Powered by Blogger.