Header Ads



பஸில் ராஜபக்ஷ தலைமையில் அம்பாரை மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக தெளிவுபடுத்தும் பொதுக்கூட்டம்

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில்  அம்பாரை மாவட்ட  அபிவிருத்தி தொடர்பாக தெளிவுபடுத்தும் மாபெரும் பொதுக்கூட்டமொன்று எதிர்வரும் 11ஆம்திகதி அம்பாரையில் நடைபெறவுள்ளது. 

அம்பாரைமாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர்பிரிவுகளிலிருந்தும் 6000க்கும் அதிகமானோர் கலந்துகொள்ளவுள்ள இக்கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை அம்பாரை மாவட்டகூட்ட மண்டபத்தில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன் தலைமையில் நடைபெற்றது. இதில் திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர்கள் உதவிப்பணிப்பாளர்கள் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அபிவிரு;தி உதவியாளர்கள் உட்பட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.