Header Ads



ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்


(ஹாசிப் யாஸீன்)

கல்முனை ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் ஏற்பாட்டில் 8 வது வருடமாக ஒழுங்கு செய்திருந்த இரத்ததான முகாம் இன்று காலை கல்முனை தைக்கா வீதியில் அமைந்துள்ள முஹம்மதிய்யா ஜும்ஆப் 
பள்ளிவாசலில் இடம்பெற்றது

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன்.
ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் ஏ.செயினுலாப்தீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி இரத்ததான முகாமில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் , கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ. கப்பார் , பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹித் , ஜும்ஆப் பள்ளிவாசல் உப தலைவர் ஏ.எம்.எம்.ஏ.அத்னான் , கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை இரத்த வங்கி வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தா்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த இரத்ததான நிகழ்வில் பெருமளவில் இளைஞா்களும், பெண்களும் கலந்து கொண்டனா்.




No comments

Powered by Blogger.