டுபாயில் வாழும் வெளிநாட்டினர் குறித்து அதிர்ச்சிகர தகவல்..!
(thoo) ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் வெளிநாட்டினர் தங்களின் குழந்தைகளுடன் தினமும் 50 நிமிடங்களே செலவிடுகின்றனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல் ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கணவனும், மனைவியும் வேலைக்குப் போகும் குடும்பத்தில்தான் இத்தகைய அவல நிலை. அவர்களின் நேரங்களில் பணி நேரமும், நீண்ட பயண நேரமும் அதிகமாகச் சென்று விடுவதுதான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இது போதாதென்று தொலைக்காட்சியும், இணையதளங்களும் இன்னொரு காரணம். வேலை விட்டு வீடு வந்தால் தாங்கள் தொலைக்காட்சியிலும், இணையதளத்திலும் மூழ்கி விடுவதாக பெற்றோர்கள் கூறுகிறார்கள்.
தங்கள் நேரங்களில் அதிகமானவற்றை தொலைக்காட்சி எடுத்துக்கொள்வதாக 14 சதவீத பெற்றோர் கூறியிருக்கிறார்கள். இணையதளம் எடுத்துக்கொள்கிறது என்று 11 சதவீதம் பெற்றோர்கள் கூறியிருக்கிறார்கள். வீட்டு வேலைகளில் மூழ்கி விடுவதாக 8 சதவீத பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வில் வெளிவந்துள்ள இன்னொரு தகவலும் அதிர்ச்சியைத் தருகின்றது. குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்து விட்டால் தங்களுடன் நேரம் செலவழிக்க விரும்புவதில்லை என்று 5 சதவீத பெற்றோர் கூறியிருக்கின்றனர்.
பெற்றோர்கள் பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்காமல் சென்றால் குழந்தைகளின் குணாதிசயங்களில் மாற்றம் உண்டாகும், அவர்களின் வளர்ச்சியிலும், வாழ்க்கைப் போக்கிலும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்த ஆய்வை நடத்திய நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் அது குழந்தைகளிடம் விபரீத குணங்களை ஏற்படுத்துகிறதாம்.
பெற்றோர்கள் பிள்ளைகளுடன் அதிகம் பழகாமல் போவதால் சொந்த நாட்டின் கலாச்சாரம் குழந்தைளுக்குத் தெரியாமலேயே போய்விடுவதாகவும் அந்த நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
வேலைக்குச் செல்லும் தம்பதியினர் தங்கள் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதற்கு பணிப் பெண்களை நியமிப்பது அந்தக் குழந்தைகளின் கலாச்சார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது என்று மருத்துவ நிபுணர் டாக்டர் நிஷா வர்கீஸ் கூறுகிறார்.
Post a Comment