இத்தாலியில் ஈரானியப்பெண்ணை கொன்ற இந்திய ஜோடி கைது
இத்தாலியில் ராஜேஷ்வர் சிங் (29) மற்றும் கங்காதீப் கவுர் (30) ஆகிய இருவரும் மிலன் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்
தங்கியுள்ளனர். அவர்களுடன் ஆடை வடிவமைப்பாளர் பயிற்சி பெற்றுவந்த ஈரானை சேர்ந்த மெஹ்பாப் அஹட்சவோஜி (29) என்ற பெண்ணும் தங்கியிருந்தார்.
அப்போது மெஹ்பாப்பை பாலியல் இச்சைக்கு இவர்கள் உட்படுத்தியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவிக்கவே அவர்கள் இருவரும் மெஹ்பாப் கழுத்தை இறுக்கி கொன்று இருக்கின்றனர். பின்னர் அவரது நிர்வாண உடலை ஒரு சூட்கேசில் அடைத்து லெக்கோ நகரில் உள்ள ஏரியில் வீச ரெயிலில் எடுத்து சென்றுள்ளனர்.
ஆனால், அங்கு மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால், மீண்டும் வெனிஸ் நகருக்கு ரெயிலில் எடுத்துச்செல்ல தீர்மானித்தனர். பிறகு அங்கிருந்த கால்வாயில் வீசிவிட்டு திரும்பிவிட்டனர். ஒரு வாரம் கடந்த நிலையில் மெஹ்பாப்பின் சடலமானது லிடோ தீவு அருகே போலீசார் கண்டெடுத்தனர்.
கைரேகை நிபுணர்கள் அவரது சடலத்தை சோதனை நடத்தினர். இதில் கொலையாளிகளின் கைரேகை பற்றிய விவரம் தெரியவந்தது. பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவில் ராஜேஷ்வர் சிங் மற்றும் கங்காதீப் கவுர் ஆகிய இருவரும் சூட்கேசுடன் வந்தது பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முதலில் மறுப்பு தெரிவித்த அவர்கள், பிறகு செய்த குற்றத்தை
ஒத்துக்கொண்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
Post a Comment