Header Ads



மனித தலை கறி விற்பனை - நைஜீரியாவில் பயங்கரம்

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் ஒரு ஓட்டலில் மனித உடல் உறுப்புகளை வறுத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பயங்கரமான செயலில் ஈடுபட்டதாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் சட்டவிரோதமான நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. 

இந்நிலையில், அனம்பிரா என்ற இடத்தில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றில், மனித உடல் உறுப்புகளை வறுத்து விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த ஓட்டலுக்கு விரைந்து சென்று போலீசார் சோதனை நடத்தினர். அங்கு 2 மனித தலைகளை கலர் பேப்பரில் அழகாக சுற்றி வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

ஓட்டலில் மனித சதைகளை வெட்டி வறுத்து விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ஏ.கே.47 உள்பட பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். அத்துடன் ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், சம்பந்தப்பட்ட அந்த ஓட்டலில் மனித இறைச்சி என்று கூறியே மிக மிக அதிக விலைக்கு விற்று வந்துள்ளனர். அதை வாடிக்கையாளர்கள் வாங்கி சாப்பிட்டுள்ளனர். ஓட்டல் மெனுவில், மனித தலை ரோஸ்ட் என்பதையும் சேர்த்துள்ளனர் என்றனர்.

ஓட்டலில் சாப்பிட சென்ற பாதிரியார் ஒருவர் தனது அனுபவத்தை கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த ஓட்டலில் சாப்பிட சென்றேன். அங்கு பரிமாறப்பட்ட இறைச்சியை சாப்பிட்டேன். அதற்கு அதிகபட்சமாக பில் போட்டனர். அப்போதுதான் நான் சாப்பிட்டது மனித மாமிசம் என்று தெரிந்தது. 

அதிர்ச்சியில் அப்படி உறைந்து விட்டேன். நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. மனித மாமிசத்தை மனிதர்களே விற்கிறார்கள் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என்றார். 

No comments

Powered by Blogger.