அரச உத்தியோகத்தர்களிடையே அரசகரும மொழிக் கொள்கையை அமுல்படுத்துவதற்கான நிர்வாக சுற்றறிக்கை
அரச உத்தியோகத்தர்களிடையே அரசகரும மொழிக் கொள்கையை அமுல்படுத்துவதற்கான அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை (சுற்றறிக்கை இலக்கம்: 01/2014) அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி.பீ அபேகோன் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணங்களின் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் அனைவருக்கும் தற்போது அனுப்பியுள்ளார்.
அமைச்சின் செயலாளரினால் அனுப்பப்பட்டுள்ள அரசகரும மொழிக் கொள்கை சமந்தப்பட்ட இச்சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
அரசாங்க உத்தியோகத்தர்களினால் எய்தப்பட வேண்டிய அரசகரும மொழித் தேர்ச்சிக்குரியதான விடயங்களை ஆய்வு செய்து சிபார்சுகளைச் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களின் குழுவின் 2013.05.29 ஆம் திகதியிடப்பட்ட அறிக்கையின் மூலம் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு அரசகரும மொழிக் கொள்கையை அமுல்படுத்துவதற்குரியதாக வெளியிடப்பட்ட 2007.05.28 ஆம் திகதியிடப்பட்டதும் 07/2007 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைக்கும் அத்துடன் இதற்குச் செய்யப்பட்ட திருத்தங்களுக்கும் பதிலாக பின்வரும் ஏற்பாடுகள் உரியதாக வேண்டும் என 2013.06.20 ஆம் திகதி அன்று நடாத்தப்பட்ட அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க சேவைக்கு / மாகாண அரசாங்க சேவைக்கு திறந்த, மட்டுப்படுத்தப்பட்ட அத்துடன் திறமை அடிப்படையில் 2007.07.01 ஆம் திகதி தொடக்கம் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அத்துடன் எதிர்காலத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்படும் உத்தியோகத்தர்கள் அனைவரும் தாம் அரசாங்க சேவைக்கு இணைந்த அரசகரும மொழிக்கு மேலதிகமாக குறித்த பதவிக்குரிய மற்றைய அரசகரும மொழி தொடர்பிலான தேர்ச்சியை சேவையில் இணைந்து ஐந்து (05) வருட காலத்திற்குள் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
மட்டுப்படுத்தப்பட்ட அத்துடன் திறமை அடிப்படையில் 2007.07.01 ஆம் திகதியிலிருந்து 07/2007 (II) ஆம் இலக்கமுடைய அரசாங்க நிருவாக சுற்றறிக்கை வெளியிடப்பட்ட 2011.07.13 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட உத்தியோகத்தர்கள் 2011.07.13 ஆம் திகதியிலிருந்து ஐந்து (05) வருட காலப்பகுதிக்குள், தாம் புதிய நியமனம் பெற்ற உயர் பதவிக்குரிய மொழித் தேர்ச்சி மட்டத்தை ஏய்துதல் வேண்டும்.
2007.07.01 ஆம் திகதியிலிருந்து 2010.06.30 ஆம் திகதி வரை திறந்த அடிப்படையில் அரசாங்க சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட/ நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு உரிய மொழித் தேர்ச்சி மட்டத்தை எய்துவதற்கு அவர்களுடைய நியமனத் திகதியிலிருந்து வழங்கப்பட்டுள்ள ஐந்து (05) வருட கால எல்லைக்கு மேலதிகமாக மற்றுமொரு இரண்டு (02) வருடங்களைக் கொண்ட சலுகைக் காலம் ஒன்று வழங்கப்படுவதோடு, இந்தக் காலப்பகுதிக்குள் உரிய மொழித் தேர்ச்சி மட்டத்தை எய்துதல் வேண்டும்.
பதவிகளுக்கு கையளிக்கப்படும் பொறுப்புகளுக்கு அமைவாகத் தேவைப்படும் மற்றைய அரசகரும மொழித் தேர்ச்சி மட்டம் பின்வருமாறு நான்கு (04) வகுதிகளைக் கொண்டுள்ளன.
1 ஆம் வகுதி:-
(அ) இந்த தேர்ச்சி மட்டத்திற்கு உரியதாக அரசகரும மொழிகள் திணைக்களத்தின் சார்பில் பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்படும் எழுத்து மூலப் பரீட்சையிலும் அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் வாய்மொழி மூலப் பரீட்சையிலும் சித்தியடைதல் வேண்டும்.
(ஆ) அதேபோன்று க.பொ.த (சா/த) இல் இரண்டாம் மொழி சிங்களம் / தமிழ் பாடத்தில் சித்தி பெற்றிருப்பது எழுத்து மூலப் பரீட்சைக்கு மாற்றுத் தகைமையாகும்.
(இ) உத்தியோகத்தர் ஒருவர் சேவையில் இணைந்த அரசகரும மொழியல்லாத மற்றைய அரசகரும மொழி நிருவாக மொழியாக பயன்படுத்தப்படுகின்ற, மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேச செயலாளர் பிரிவு ஒன்றில் உள்ள அரசாங்க நிறுவனம் ஒன்றில் ஒரு வருட காலப்பகுதிக்கு அல்லது அதற்கு கூடுதலாக சேவையாற்றுதல் வாய்மொழிமூலப் பரீட்சைக்கு மாற்றுத் தகைமையாகும்.
2 ஆம் வகுதி:-
இந்த வகுதிக்கான தேர்ச்சி மட்டத்திற்கு உரியதாக அரசகரும மொழிகள் திணைக்களத்தின் சார்பில் பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் எழுத்து மூலப் பரீட்சையிலும் அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் வாய்மொழி மூலப் பரீட்சையிலும் சித்தியடைதல் வேண்டும்.
3 ஆம் வகுதி:-
(அ) இந்த வகுதிக்கான தேர்ச்சி மட்டத்திற்கு உரியதாக அரசகரும மொழிகள் திணைக்களத்தின் சார்பில் பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் எழுத்து மூலப் பரீட்சையிலும் அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் வாய்மொழி மூலப் பரீட்சையிலும் சித்தியடைதல்.
அல்லது
(ஆ) தாம் சேவையில் இணைந்த சந்தர்ப்பத்தில் அமுலில் இருந்த சேவைப் பிரமாணக் குறிப்பின் / ஆட்சேர்ப்புத் திட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக உரிய மற்றைய அரசகரும மொழித் தேர்ச்சியை பெறும் தேவையைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
அல்லது
(இ) சேவை ஆரம்ப முயற்சியின் ஒரு பகுதியாக 3 ஆம் வகுதிக்காக விதித்துரைக்கப்பட்டுள்ள பாட சிபாரிசுக்கு அமைவாக ஆக்க் குறைந்தது 150 மணித்தியாலங்கள் கொண்ட காலப்பகுதியின் சார்பில் அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் / தேசிய மொழிக் கல்வி, பயிற்சி நிறுவனத்தினால் அல்லது இந்த நிறுவனங்களின் மேற்பார்வையின் கீழ் நடாத்தப்படும் சிங்களம் / தமிழ் மொழிப் பயிற்சி நெறி ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர் நடாத்தப்படும் எழுத்துமூல, வாய்மொழிமூல பரீட்சையில் சித்தியடைதல் வேண்டும்.
4 ஆம் வகுதி:-
(அ) இந்த வகுதிக்கான தேர்ச்சி மட்டத்திற்கு உரியதாக அரசகரும மொழிகள் திணைக்களத்தின் சார்பில் பரீட்சைகள் பரீட்சைகள் திணைக்களத்தால் நடாத்தப்படும் எழுத்துமூலப் பரீட்சையிலும் அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் வாய்மொழிமூலப் பரீட்சையிலும் சித்தியடைதல் வேண்டும்.
அல்லது
(ஆ) இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனம் அல்லது மாகாண சபை ஒன்றினால் நிருவகிக்கப்படும் பயிற்சி நிறுவனம் ஒன்றினால் அரசகரும மொழிகள் திணைக்களத்தின் வழி காட்டலின் கீழ் ஆக்க் குறைந்தது 100 மணித்தியாலங்களுக்குள் 4 ஆம் வகுதிக்காக விதித்துரைக்கப்பட்டுள்ள பாட சிபாரிசுக்கு அமைவாக நடாத்தப்படும் அரசகரும மொழித் தேர்ச்சியுடன் தொடர்புபட்ட பாட நெறி ஒன்றில் கலந்து கொண்டு அதன் பின்னர் அரசகரும மொழிகள் திணைக்களத்தின் வழி காட்டலின்மீது நடாத்தப்படும் எழுத்துமூல, வாய்மூலப் பரீட்சையில் சித்தியடைதல்.
மேல் 1 ஆம் வகுதிக்கு ஏற்புடைத்தாக்கப்படும் மாற்று தகைமைகளை பூர்த்தி செய்வதன் மூலம் ஏனைய வகுதிகளுக்கு உரியதாகவுள்ள மொழித்தேர்ச்சியை பூர்த்தி செய்யும் தேவையிலிருந்து விலக்களிக்க முடியும்.
புதிதாக இனங்காணப்பட்டுள்ள இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்கும் இலங்கை ஆசிரியர் சேவைக்கும் ஆட்சேர்ப்புச் செய்யப்படும் உத்தியோகத்தர்களுக்கும் 2007.07.01 ஆம் திகதி தொடக்கம் இந்த ஏற்பாடுகள் ஏற்புடைத்தாக்கப்பட வேண்டும் என்பதோடு அவர்களுக்கு இந்த சுற்றறிக்கை அமுலுக்கு வரும் திகதியிலிருந்து மொழித் தேர்ச்சி பெற்றுக்கொள்வதற்கு ஐந்து (05) வருடங்களைக் கொண்ட சலுகைக் காலமொன்று உரியதாகும்.
உரிய காலப்பகுதிக்குள் மொழித்தேர்ச்சியை எய்த தவறும் உத்தியோகத்தர்களுக்கான இந்த குறித்த காலப் பகுதி முடிவுற்றதும் வழங்கப்பட வேண்டிய சம்பள ஏற்றங்கள், இயைபுள்ள தகைமைகள் பெறும் வரைக்கும் இடைநிறுத்தப்படும்.
ஆங்கில மொழி மூலம் அரசாங்க சேவையில் இணைந்துகொள்ளும் உத்தியோகத்தர்கள் பின்வருமாறு அரசகரும மொழித்தேர்ச்சியினைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
(1) ஒரு அரசகரும மொழியொன்றின் தேர்ச்சியை தாய் மொழி மட்டத்திலும் மற்றைய அரசகரும மொழித் தேர்ச்சியை இரண்டாம் மொழி மட்டத்திலும் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
(2) தாம் தாய் மொழி மட்டத்திலான தேர்ச்சியைப் பெற்றுக் கொள்வது எந்த அரசகரும மொழியில் என்பது உத்தியோகத்தரின் விருப்பத்திற்கமையத் தீர்மானிக்கப்படலாம். தாய் மொழி மட்டத் தேர்ச்சியை சேவையில் இணைந்து மூன்று (03) வருட காலத்திற்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதோடு, இரண்டாம் மொழி மட்டத்திலான தேர்ச்சியை சேவையில் இணைந்து ஐந்து (05) வருட காலத்திற்குள் பெற்றுக் கொள்ளுதலும் வேண்டும்.
(3) ஆங்கில மொழி மூலம் சேவையில் இணைந்து கொள்ளும் உத்தியோகத்தர் ஒருவர் தாம் சேவையில் இணைந்து கொள்வதற்கு முன்னர் அல்லது சேவைக் காலப் பகுதியில் க.பொ.த.(சா/த) இல் சிங்களம்/தமிழ் மொழியுடன் இலக்கியமும் சித்தியடைந்திருந்தால், குறித்த அரசகரும மொழி சம்மந்தமாக தாய் மொழி மட்டத்திலான தேர்ச்சியினைப் பெற்றுக் கொள்ளும் தேவையை உத்தியோகத்தர் பூர்த்தி செய்துள்ளார் என கருதப்படல் வேண்டும்.
(4) ஆங்கில மொழி மூலம் சேவையில் இணைந்து கொள்ளும் உத்தியோகத்தர் ஒருவருக்கு இரண்டாம் மொழித் தேர்ச்சி மட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கு 4 ஆம் பந்தியில் உள்ள ஏற்பாடுகளை ஏற்புடைத்தாக்கிக் கொள்ளலாம்.
எழுத்து மூலப் பரீட்சை அரச மொழிகள் திணைக்களத்தின் சார்பில் பரீட்சைகள் திணைக்களத்தினாலும், வாய்மொழிமூலப் பரீட்சை அரசகரும மொழிகள் திணைக்களத்தினாலும் ஒரு வருடத்தில் இரண்டு தடவை என்ற வகையில் 2014 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படுதல் வேண்டும்.
உரிய அரசகரும மொழித் தேர்ச்சியினைப் பெற்றிருப்பதை மெச்சும் வகையில் உத்தியோகத்தர்கள் வெளிநாட்டுப் புலமைப் பரிசில்கள், பயிற்சிப் பாடநெறிகள் அல்லது பட்டப்பின் படிப்பு போன்றவத்திற்கு விண்ணப்பிக்கும்போது அரசகரும மொழி தொடர்பில் தேர்ச்சி பெற்றுள்ள உத்தியோகத்தர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.
அரசாங்க சேவைக்கு ஏற்புடைத்தாக்கப்படும் இம்மொழித் தேர்ச்சி தேவையை அரசாங்க கூட்டுத்தாபனங்களிலும் நியதிச்சட்டசபைகளிலும் அரசாங்க வங்கிகளிலும் முற்று முழுதாக அரசுடமையாக்கப்பட்ட கம்பனிகளிலும் உள்ள பதவிகளுக்கும், இந்த சுற்றறிக்கை அமுலுக்கு வரும் திகதியன்று அல்லது இதற்குப் பின்னர் சேவையில் இணைந்து கொள்ளும் உத்தியோகத்தர்களுக்கும் ஏற்புடையதாகுமென குறிப்பிட்டு சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கு நிதி, திட்டமிடல் அமைச்சின் செயலாளரினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
சகல ஆட்சேர்ப்புத் திட்டங்களிலும் சேவை பிரமாணக் குறிப்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மற்றைய அரசகரும மொழி சம்மந்தமான ஏற்பாடுகள் இந்த சுற்றறிக்கையின் ஏற்பாடுகள் இந்த சுற்றறிக்கையின் ஏற்பாடுகளுக்கு அமைவாகத் திருத்தி அமைக்கப்பட்டதாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.
இந்த சுற்றறிக்கை அமைச்சரவையின் அங்கீகாரத்தின் மீது வெளியிடப்படுகின்றது.
இதை வாசிப்பதே இடியப்ப சிக்கலாக உள்ளது.சிங்களவருக்கு தமிழும்,தமிழருக்கு சிங்களமும்,இப்படி மாறிமாறி இருவர் இரு மொழிகளை படிப்பதை விட,இருவரும் சேர்ந்து பொதுவாக ஆங்கிலத்தை படித்து அதையே நாட்டின் அரச கரும மொழியாக பிரகடணப்படுத்தி இருந்தால் எவ்வளவோ சாலச்சிறந்ததாக இருந்திருக்கும்,நாடும் பல வகையில்,பொருளாதாரத்தில்,தொழில்னுற்பத்தில்,சமாதானத்தில் இப்படி பலதில் முன்னேற்றம் கண்டிருக்கும்.இதையே நாம் பல வருடங்களாக அரசுக்கு அப்பப்போது பல ஊடகங்களில்,குறிப்பாக சிரச தொலைக்காட்சி நடத்திய சமாதானத்திற்கான நிகழ்வொன்றிலும் சொல்லியிருந்தோம்,இதுவே பலராலும் சம்மதிக்கப்பட்டது.சிங்கப்பூரிலும் ஆங்கிலமே அரச/தேசிய மொழி,ஆனால் அங்கும் பல சில்லறை மொழிகள் உண்டு.யார் வேண்டுமானாலும் எந்த மொழியையும் பேசட்டும் ஆனால் அரச மொழியென்று வரும்போது மட்டும் ஆங்கிலத்தை பயன்படுத்த வேண்டும்.
ReplyDeleteகாலா காலமாக நாட்டை போட்டிபோட்டு ஆட்சி செய்யும் அனைத்து சிங்கள அரசுக்கும் இந்த உண்மை தெறியும்,ஆனால் செயற்படுத்ததான் தயக்கம்,ஏனெனில்,ஆங்கிலத்தில் பரீட்சியம் பெற்றவர்கள் அதிகமாக சிறுமாண்மை மக்களே,இதனால் தொழில் துறைகள் அனைத்திலும் பெறும்பாண்மை இனமாக சிறுபாண்மை மக்களே அதிக இடத்தை பிடித்து விடும் எங்கின்ற சுயனலத்தால்தான் தேங்குழல் மொழியையே மேலும் மேலும் நடைமுறைப்படுத்துகிறார்கள்.
இங்குள்ள சுற்றறிக்கைக்கு அமையவே ஒரு வேளை நாடு இயங்கினாலும்,எல்லாமே மொழி தடை தாண்டி பரீட்சை முடியும் வரைக்கும்தான்.அது முடிந்தாலோ படித்ததையும் மறந்து வழக்கமான மொழியிலேயே மீண்டும் அனைத்தும் செல்லும்.இந்த போக்கு அதிகமாக பெறும்பாண்மை மக்களிடம் உள்ளது.இந்த சுற்றறிக்கை ஒன்றும் புதிதல்ல,அரச சேவையில் பல காலங்களாக இருந்தது,ஆனால் வேண்டுமென்றால்,அதனை மீண்டும் புத்துப்பித்திறுக்கலாம்.
எனவே,ஏற்கனவே அரச கரும மொழிகள் கட்டாயமான நடைமுறையில் இருந்தும் நாட்டில் இனத்துவேசங்கள் எப்படி வந்தது என்பதே எனது கேள்வி.வேறுபட்ட புறிந்துணர்வற்ற இரு/பல மொழிகளும் சமாதானத்திற்கு எதிறான விடயங்கள் என்பது உலக உண்மை.இலங்கை இனப்பிரச்சினக்கும் மொழி ஒரு தடையாக இருந்ததும் ஒரு காரணம் என்பதும் அனைவருக்கும் தெறியும்.
எனவே,சுயனலமில்லாமல், பொது நலமாக யோசித்து நாட்டை முன்னேற்றும் விதமாக ஆங்கிலத்தை அரச கரும மொழியாக இனிவரும் பதவி நியமணங்கள் அனைத்திற்கும் கட்டாயப்படுத்தியும்,தற்போது சேவையிலுள்ள 45 வயதிற்கு உட்பட்ட ஏனைய பழைய உத்தியோகத்தர்களுக்கும் இதனை கட்டாயப்படுத்த வேண்டும்.சகல இன மக்களும் ஆங்கிலத்தை பொதுவான பாடமாக பாடசாலைகளில் கற்பதால்,இது ஒன்றும் வித்தையாக இருக்க மாட்டாது.இதையே ஒரு சட்டமாக மேலும் ஒரு படு அரசியல் வாதிகளுக்கும் வைத்தால்,குப்பைகூலங்கள் அரசியலுக்கு வருவதையும் குறைக்கலாம்.