அமைச்சர் அதாவுல்லாவுக்கு மகஜர் அனுப்பிவைப்பு
(ஏ.ஜி.ஏ.கபூர்)
நாடு முழுவதும் ஜனவரி-15 முதல்; அரச , தனியார் பஸ் வண்டிகள் ஒன்றினைந்த நேர அட்டவணையின் கீழ் சேவையிலீடுபடுவது போன்று கிழக்குப் பிராந்திய அரச , தனியார் பஸ் வண்டிகள் ஒன்றினைந்த நேர அட்டவணையின் கீழ் சேவையிலீடுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு கோரும் கோரிக்கை உட்பட வரையறுக்கப்பட்ட தென் கிழக்கு தனியார் பேருந்து லிமிடெட் எதிர் நோக்கும் பத்து முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுத் தருமாறு கோரும் மகஜர் ஒன்றினை தென் கிழக்கு தனியார் பேருந்து லிமிடெட் இன் செயலாளர் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
நீண்ட காலமாக நாம் எதிர்நோக்கும் மேற்படி பிரச்சினைகளை மிகப் பொறுப்பு வாய்ந்ததும் அதிக வேலைப் பழு உள்ளதுமான அமைச்சுப் பதவியை வகிக்கும் உங்களை கஸ்டப் படுத்தாமல் கிழக்கு மாகாண போக்குவரத்து அமைச்சின் முலம் தீர்த்துக் கொள்வதற்கான பல நடவடிக்கைகளை எடுத்திருந்தோம் அவைகளைத் தீர்த்துத் தருவார் எனப் பல வருடங்களாகக் காத்திருந்தும் எந்தவிதமான தீர்வும் கிடைக்காத நிலையில் உங்களின் ஊடாகத் தீர்வைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் நம்பிக்கையோடு இந்த மகஜரை உங்களுக்கு சமர்ப்பிக்கீன்றோம் என அந்த மகஜரில் கூறப்பட்டுள்ளது.
மகஜரில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் காரியாலயங்கள் திருகோணமலை, மட்டக்களப்பு , அம்பாரை ஆகிய இடங்களில் அமையப் பெற்றது போன்று கரையோர மாவட்டத்திற்கான அலுவலகம் ஒன்றினை அமைத்துத் தரல்.- இதன் முலம் அன்றாடம் ஏற்படுகின்ற பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்துக் கொள்ள முடியும்.
வழி அனுமதிப் பத்திரத்தின் பெயரினை மாற்றுவதற்கான கட்டணத்தைக் குறைத்தல்.
புதிதாக நேரம் வழங்கி பஸ் வண்டிகளை அனுப்புகின்றனர். இவர்களுக்கு பஸ் கம்பனி நேரம் வழங்காவிட்டால் பொலிசாரைக் கொண்டு தாக்குகின்றனர். இதனைத் தவிர்த்து ஒரு ஒழுங்கு முறையின் கீழ் செயற்படுத்தல்.
கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் அச்சிடப்பட்ட பயணச் சீட்டுக்கள் தவிர்ந்த ஏனைய பயணச் சீட்டுக்கள் பாவிப்பதற்கு தண்டப் பணம் விதிக்கின்றனர். நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் இலத்திரனியல் பயணச் சீட்டுக்களில் வாகன இலக்கம், முகவரி, தொலைபேசி இலக்கம், நேரம் முதலியவை பொறிக்கப்பட்டு விநியோகிப்பதோடு, முற் கொடுப்பனவு அட்டை முலம் பற்றுச் சீட்டு பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில் ஏன் கிழக்கு மாகாண சபைக்கு மாத்திரம் ஏற்படுத்தப் பட்டுள்ள தனியான நடைமுறையை நிறுத்தல்.
ஆசனப் பதிவுகளுக்கு ருபா இருபது வீதம் பெற்று அவர்களின் வருமானத்தை அதிகரிக்கின்றார்களே தவிர உரிமையாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்வதில்லை. இதனைச் சீர் செய்தல்.
கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் கப்பம் கொடுக்கும் உரிமையாளர்களுக்கு முன்னுரிமையும் அவர்கள் கேட்கும் நேரத்தையும் வழங்குவதை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளல்.
கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையில் அனுமதிப் பத்திரம் பெற்ற பல பஸ் வண்டிகள் ஓடுவதற்கு நேரமில்லாமல் இருக்கும்போது, கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் பல இலட்சம் ருபா கப்பம் பெற்றுக் கொண்டு வழி அனுமதிப் பத்திரம் வழங்குகின்றனர். இதனைத் தடுக்க நடவடிக்கை மேற் கொள்ளல்.
நிலையப் பொறுப்பதிகாரிகள், நேரக் காப்பாளர்கள் றனர் காசு என்ற அடிப்படையில் ஒவ்வொரு பஸ் வண்டியிடமும் தலா 300.00 (முன்னூறு) வீதம் கப்பம் பெற்று அதிக வருமானம் ஈட்டுவதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளல்.
பெரும்பான்மையாகத் தமிழ் பேசுபவர்களைக் கொண்ட அக்கரைப்பற்றுத் தனியார் பஸ் நிலையத்திற்கு நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் நேரக்காப்பாளர்களாக சிங்கள மொழி பேசுபவர்கள் நியமிக்கப்படடுள்ளார்கள். மொழிப் பிரச்சினை காரணமாக நாளாந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பல்வேறு கஸ்டங்களை எதிர் நோக்குகின்றனர். இதனைத் தீர்க்க தமிழ் மொழி பேசுவோர்களை நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் நேரக்காப்பாளர்களாக நியமிக்க நடவடிக்கை மேற் கொள்ளல் .
Post a Comment