கையடக்க தொலைபேசிகளை அடையாளப்படுத்தும் தேசிய பதிவகம்
(Tn) போலியான கையடக்கத் தொலைபேசிகள் சந்தைக்கு வராமல் தடுப்பதற்கும், கையடக்கத் தொலைபேசிகள் களவாடப்படுவதைத் தடுக்கும் நோக்கிலும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு உபகரணங்கள் பதிவு நடவடிக்கையொன்றை புதிதாக ஆரம்பிக்கவுள்ளது.
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் உபகரணங்கள் அடையாளப்படுத்தும் தேசிய பதிவகம் (National Equipment Identity Register) முறையை நிறுவுவதற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போது நாட்டில் அனைவரும் கையடக்கத்தொலைபேசிகளைப் பயன்படுத்துகிறார்கள். இலங்கையில் 2.2 மில்லியன் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் உள்ளனர். இவர்களைப் பாதுகாக்கும் நோக்குடனேயே இந்தப் புதிய திட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்வைத்த ஆலோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
புதிதாக நிறுவப்படவுள்ள இந்தப் பதிவு முறை ஒரு தனியான கட்டமைப்பாக இயங்கவுள்ளது. கையடக்கத்தொலைபேசி இணைப்புகளை வழங்கும் நிறுவனங்கள் அனைத்தும் இந்தக் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்படும். கையடக்கத்தொலைபேசியை வைத்திருப்பவரின் அடையாளம் காணக்கூடிய சிம் மாற்றி, மற்றுமொரு தொலைபேசி சேவையூடாக தொடர்புகொள்ளும்போது குறித்த கையடக்கத்தொலைபேசி அடையாளம் காணப்படும்.
Post a Comment