ரவி ஆட்கள் எவராவது தேர்தலில் வென்றால், கொழும்பு மேயர் ராஜினாமா
(நஜீப் பின் கபூர்)
தனது மனைவிக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்காமல் போனதற்கு முக்கிய காரணகர்த்தா ரவி கருணாநாயக்காதான் என்று கொழும்பு மேயர் முஸம்மில் குறிப்பிட்டதுடன் ரவி நிறுத்தியுள்ள அக்ரம் , மரீனா அடுத்த சிங்கள வேட்பாளர் எவராவது ஒருவர் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் தான் கொழும்பு மேயர் பதவியைவிட்டு இராஜிநாமச் செய்து விடுவதாக இன்று கொழும்பில் நடந்த தொலைக்காட்சி நிகழச்சியொன்றில் அதிரடியாக அறிவித்தார் கொழும்பு மேயர் முஸம்மில்.
இந்த அறிவிப்பு சற்று ஓவர் என்று தான் தெரிகின்றது. இந்த நிகழ்ச்சியில் ஐ.தே.க. தவிசாளர் கபீர் ஹாசிம் மற்றும் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் தனது மனைவியின் பெயர் இல்லாமல் வேட்பு மனு வெளியிடப்படமாட்டாது என்று தன்னிடம் குறிப்பிட்டதாகவும் முஸம்மில் அந்த நிகழ்ச்சியில் வைத்துத் தெரிவித்தார். மேலும் தனது மனைவி பெரேசாவுக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் கொடுத்தால் தாம் வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிட மாட்டோம் என்று கடைசி நேரம் வரை முஜீபூர் ரஹ்மானும் .வேட்பாளர் பைரூசும் வம்பு பண்ணியதாகவும் அவர் குறிப்பிட்டார். வருகின்ற தேர்தலில் தான் ஐ.தே. கட்சிக்காகப் பிரசாரம் செய்வது சாத்தியமில்லை என்றும் முஸம்மில் நிகழ்ச்சியில் வைத்து அதிரடியாக அறிவித்திருக்கின்றார்.
Post a Comment