புதிய தேசிய கல்விக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா
(ஜே.எம்.ஜெஸார்)
இலங்கையின் உயர்கல்வியை தொழில் உலகை இலக்காக் கொண்டு நவீனமயப்படுத்தும் அரசின் கொள்கைக்கமைய முகாமைத்துவம் மற்றும் முயற்சியான்மை தொடர்பான தேசிய கல்விக் கல்லூரியொன்றை ஆரம்பிப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்றுக் (12.02.2014) தேசிய கல்வி நிறுவக வளாகத்தில் நடைபெற்றது.
மகரகம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இயங்கும் வளாகத்தில் அமையப் பெறவுள்ள இக்கல்லூரிக்கு எதிர்வரும் வருடம் மாணவ ஆசிரியர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். மத்திய கட்டட பொறியியலாளர் திணைக்களம் இக்கல்லூரிக்கான கட்டடங்களின் நிர்மாணப் பணிகளின் முதலாம் கட்டத்தை இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்யும் பெறுப்பை ஏற்றுள்ளது.
தேசிய கல்வி நிறுவக பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் இடம்பெற்ற மேற்;படி விழாவில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, யுனஸ்கோ ஸ்தாபனத்தின் தென்ஆசியாப் பிராந்திய கல்விப் பணிப்பாளர் ஒமரோ மற்றும் தேசிய கல்விக் கல்லூரிகளுக்கான பணிப்பாளர், பரீட்சைகள் திணைக்களம், கல்வி வெளியீட்டு திணைக்களங்களின் பணிப்பாளர்கள், தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய கல்வி அமைச்சர் இலங்கையின் உயர் கல்வியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவையின் பின்னணி குறித்தும் எதிர்கால வேலை உலகிற்கு பொருத்தமான கல்வியை வழங்க வேண்டியன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மேலும் அவர், முகாமைத்துவம் மற்றும் முயற்சியாண்மை தொடர்பான தேசிய கல்விக் கல்லூரியின் நிர்மாணப் பணிகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யவும், எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் 400 மாணவர்களை இக்கல்லூரிக்கு தெரிவுசெய்யவும் தாம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
Post a Comment