Header Ads



தென்னாசியாவிலேயே தாய்மார்களின் இறப்பு விகிதாசாரம் குறைந்த நாடாக இலங்கை

தென்னாசியாவிலேயே தாய்மார்களின் இறப்பு விகிதாசாரம் குறைந்த நாடாக இலங்கையே காணப்படுகிறது என்று கணிப்பீடொன்றில் தெரியவந்துள்ளது.
 
அண்மையில் சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ள திடீர் பிரசவங்கள் மற்றும் நவீன மய சிகிச்சை சேவைகள் சம்பந்தமாக தேசிய மற்றும் மாகாணங்கள் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிசீலிப்பு அறிக்கையில் இந்தத் தகவல்கள் வெளிப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
 
குடும்ப சுகாதார செயற்பாட்டுப் பிரிவால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்ததோடு 6 வைத்தியர்களினால் நாடு முழுவதும் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
 
சாதாரணமாக ஆண்டொன்றில் இந்த நாட்டில் மூன்று லட்சத்து 50 ஆயிரம் வரையிலான குழந்தைப் பிறப்புக்கள் இடம்பெறுகின்றன என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.