Header Ads



அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை நிர்வாகத்தினரின் கவனத்திற்கு..!

(அபுஸஜாட்)

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நோயாளர் விடுதியிலுள்ள நோயாளர்களுக்கான உணவு விநியோகத்தில் ஈடுபடும் ஊழியர்கள் சுகாதார முறைகளைப் பேண வைத்தியசாலையின் முகாமைத்துவம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கை குறித்து தெரிவிக்கப்படுவதாவது,

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தற்போதைய முகாமைத்துவம் அண்மைக்காலமாக பல்வேறு அரசியல் அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளது. இவ்வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதற்கு தற்போதைய முகாமைத்துவம் முயற்சி செய்து வருகின்ற வேளையில் பல்வேறு தடங்களையும் எதிர்நோக்கியுள்ளது.

இந்நிலையில், இவ்வைத்தியசாலையின் ஒரு சில ஊழியர்களின் மனப்பாங்குகள் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன. 

இங்கு கடமை புரியும் ஒரிரு வைத்தியர்களும், சில தாதியர்களும் மற்றும் ஊழியர்களும் நோயாளர்களுடனும் நோயாளர்களைப் பார்வையிட வரும் பார்வையாளர்களுடனும் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்வதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. 

குறிப்பாக, மகப்பேற்றுப் பிரிவில் கடமை புரியும்  ஊழியர்களின் செயற்பாடுகளே நோயாளர்களினதும் பார்வையாளர்களினதும் மனங்களைக் காயப்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் நோயாளர்களுக்கு உணவு பகிர்ந்தளிக்கும் ஊழியர்கள் சுகாதார முறைகளைப் பேணாது இப்பணயில் ஈடுபடுவதாக குறிப்பிடப்படுகிறது. 

மேலும் கையுறையின்றி வெற்றுக் கரங்களினால் உணவுளை பகிர்ந்தளிப்பதாகவும் பல்வேறு நோய்களுள்;ளாகி சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு  உணவு வழங்கும்போது வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர்கள் சுகாதார முறைகளைப் பேணாது இவ்வாறு செயற்படுவது முகாமைத்துவத்திலுள்ள குறைபாடா அல்லது அவர்கள் அலட்சியப் போக்குடன் செயற்படுகிறார்களாக எனவும் வினா எழுப்பப்படுவதுடன் இது குறித்து வைத்தியசாலையின் முகாமைத்துவம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும். நோயாளர் விடுதியிலுள்ள கழிவறை மற்றும் குளியலறைகளின் சுகாதாரத்தைப் பேணவும்  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் நோயாளார்களாலும் பார்வையாளர்களாலும் கோரிக்கை விடுக்கப்படுகிறது.

3 comments:

  1. எல்ல வைத்தியசாலைகளிலும் பணிபுரியும் கீழ்மட்ட ஊழியர்களின் அட்டகாசம் மக்களால் சகிக்க முடிவதில்லை. ஏதோ மக்கள் இவர்களின் வீட்டுச்சொத்தில் பகுதை சூறையாட வந்த கூட்டத்தை பார்ப்பதைப்போலத்தான்.... அரச வைத்தியசாலைகளில் நடக்கும் அட்டகாசங்களுக்கு ஒரு எல்லையே கிடையாதா..

    ReplyDelete
  2. மிக முக்கியமான விடயம் அதாவது நேற்று இரவு சத்திர சிகிச்சை விடுதியில் இருந்து சிகிச்சை பெற்று வந்த பெண் நோயாளியின் மொபைல் மற்றும் பணங்களுடன் இருந்த மருத்துவ ரிபோட்டுகள் அனைத்தையும் யாரோ திரிடிவிட்டார்கள் அந்த நோயாளி ரெம்ப சிரமத்துக்கு மத்தியில் சென்ற மாதம் கொழும்ப்புக்கு சென்று எடுத்த எத்தனையோ றிப்போட்டுகள் அதிலிருப்பதாகவும் பணமோ மொபைலோ போனாலும் றிபோட் முக்கியம் என்று அழுவதை பார்க்க முடிந்தது இது கூட ஊழியர்களின் கவனக்குறைபாடு அல்லது அவர்களது வேலையாகவே இருக்கவேண்டும்

    ReplyDelete
  3. இதெல்லாம் பாலாய்போன அரசியல் தொழில் நியமணங்களின் பின்விளைவுகள்.தகுதியற்றவர்களுக்கு பணத்தை வாங்கி,அல்லது கோட்டா மூலம் தொழில் கொடுக்கப்போனால் இதுதான் மிஞ்சும்.சாதாரண பரீட்சையில் கூட ஒழுங்கான சித்தி அல்லது சொந்த சித்தியற்றவர்களுக்கும் இந்த மாதிரியான தொழில்கள் வழங்கபடுகிண்றன.
    குழந்தை பெறவரும் தாய்மாருக்கு அச்சுருத்தல் வழங்கப்படுகிறது.பிள்ளை கிடைத்தவுடன்,அடுத்த பிள்ளை 5 வருடத்திற்கு பிறகுதான் மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் வலியுருத்தப்படுகிரது,அப்போது அவர்களிடம் தாய்மார்கள் கேட்கும் கேள்வி,"அப்போ என் கனவன் என்னை உறவுக்கு அழைத்தால் எனக்கு பதிலாக நீ வருகிறாயா என்று".இப்படி கீழ்த்தரமான உணர்வுகளைக்கொண்டவர்களே மிக அதிகமாக அரச (வைத்தியசசாலை)தொழில்களில் உள்ளனர்.அரசியலில் மனிதர்கள் ஈடுபடுவது தன் சமூகத்தை சீர் திருத்துவற்கே,ஆனால் எம்மவர்,அதில் கொள்ளை அடிப்பதற்கும் திருடுவதற்கும்,எப்படியாவது பணம் சம்பாதிக்கவேண்டும் என்பதற்கும் மட்டுமே அரசியலில் இணைகின்றனர்,இவர்களுக்கு சமூக ஒழுக்கவியங்களோ,சமூக வளர்ச்சியோ தேவை இல்லை,ஆனால் வெரும் வார்த்தைகளாக ஆங்காங்கே பேசித்திறிவார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.