போலீஸ்காரர் தான் என்னை தாக்கினார் - உமர் அக்மல்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் உமர் அக்மல். இவர் நேற்று குல்பர்க் மார்கெட் பகுதியில் போக்குவரத்து விதியை மீறி வேகமாக வந்துள்ளார். இவரை அங்கிருந்த ஜீஷன் என்ற போலீஸ் தடுத்து நிறுத்தினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. அப்போது அக்மல் போலீசை தாக்கி அவரது சீருடையையும் கிழித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீஸ் ஸ்டேஷன் கொண்டு செல்லப்பட்ட உமர் அக்மல் உடனடியாக கைது செய்யப்பட்டார். இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். குல்பர்க் போலீஸ் அதிகாரி தாரிக் அஜிஸ் கூறுகையில், உமர் அக்மல் போலீசை தாக்கி சீருடையையும் கிழித்துள்ளார்.
இது பெரிய குற்றம். உமர் அக்மல் மீது வேகமாக வாகனம் ஓட்டுதல், போலீசை பணி செய்ய விடாமல் தடுத்தது உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்றார். உமர் அக்மல் கூறுகையில், தவறான வார்த்தையில் பேசிய போலீஸ் தான் முதலில் என்னை முகத்தில் தாக்கினார். முதலில் போலீஸ் ஸ்டேஷன் சென்று நான் தான் முறையிட்டேன். சமாதானமாக போகுமாறு கூறிய போலீசார் இப்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தால் உண்மை தெரியவரும் என்றார்.
Post a Comment