கெய்ரோ அல் - அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் ஷரீஆ கற்கை நெறியைப் பயில்வதற்கான புலமைப்பரிசில்
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
2014/2015 ஆம் ஆண்டிற்கான கெய்ரோ அல் - அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் ஷரீஆ கற்கை நெறியை மேற்கொள்வதற்காக இலங்கையிலுள்ள 10 மாணவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதத்தில் கொழும்பு - 07, புலட்ஸ் லேன், இலக்கம் 14 ல் (14 Bullers Lane, Colombo – 0) அமைந்துள்ள இலங்கைக்கான எகிப்திய தூதுவராலயத்தில் நடைபெறவுள்ளது.
நேர்முகப்பரீட்சைக்கு அரபுக் கல்லூரிகளில் இருந்து பின்வரும் விபரங்கள் அடங்கிய விதத்தில் விண்ணப்பத்தை எதிர்வரும் 2014.02.26 ஆம் திகதிக்கு முன் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்குமாறு பணிப்பாளர் கேட்டுக்கொள்கின்றார்.
1. வயதை உறுதிப்படுத்தும் ஆவணம். (2014.03.27ஆம் திகதிக்குள் 24 வயதுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்)
2. அரபுக்கல்லூரி ஒன்றில் பட்டம் பெற்றதற்கான சான்றிதல்
3. G.C.E. (A/L) பரீட்சையில் அரபுப் பாடத்துடன் சித்தி பெற்றிருத்தல்
4. மேலதிக கல்வித்தகைமை தொடர்பான ஆவணங்கள்
5. சுய விபரக்கோவை (டீழை னுயவய) (தொலைபேசி இலக்கத்துடன்)
விண்ணப்பதாரி இக்கற்கைநெறிக்கு தெரிவு செய்யப்படும் பட்சத்தில் இலங்கையிலிருந்து எகிப்திற்கான விமானக் கட்டணச் செலவினை தாமாகவே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்பதனை கவனத்திற்கொள்ளவும். அரபு மொழியில் பாண்டித்தியம் பெற்றிருத்தல் விஷேட தகைமையாக கொள்ளப்படும் எனவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
Post a Comment