Header Ads



தனது குழந்தைகள் வாழ தகுதியற்றவகையில் வீட்டை அசுத்தமாக வைத்திருந்த பெற்றோர்கள் பிரிட்டனில் கைது

தனது குழந்தைகள் வாழ தகுதியற்றவகையில் வீட்டை அசுத்தமாக வைத்திருந்ததற்காக பிரிட்டனில் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு ள்ளனர்.

லின்கொன்ஷையர் பகுதியில் வாழ்ந்துவந்த 32 வயதான மார்லா எவரட் மற்றும் 39 வயது மத்தியு கட்விரைட் ஜோடி அழுகிய உணவுகள், துரித உணவு பொதிகள், காலியா போத்தல்கள் என வீடெங்கும் அசுத்தத்தை குவித்து தனது மூன்று குழந்தைகளுடனும் வாழ்ந்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஜோடியை பொலிஸார் கைது செய்ய வந்த போது வீடெங்கும் சிறுநீர் மற்றும் மது வாசனை அடித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டிருக்கும் இந்த பெற்றோர் குழந்தைகள் மீது கொடூரமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர்களது குழந்தைகள் நான்கு வயதுக்கும் குறைவானவர்களாவர்.

No comments

Powered by Blogger.